c ஹிஹி...பஜார்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஹிஹி...பஜார்

“யாரிடம் பேசினாலும் ‘டி, டா’ போட்டு மரியாதை குறைவா பேசக் கூடாது?”
“சரி, டா...டி”
“அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே ‘தண்ணி’ அடிக்கிறியா?”
“நான் உங்க பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீங்கதான் படார்னு திரும்பிட்டீங்க!”
“பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை’’
“நிஜமாவா?’’
“ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை’’
“கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழுதி வெச்சிருக்கிறாரு?’’
“ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!’’
“ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்“
“ஆட்டோவுக்குக் கூடக் காசு மிஞ்சாதா டாக்டர்?”
“நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்’’
“வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!’’
“மனைவி என்பவள் திருக்குறள் மாதிரி’’
“எப்புடி’’
“எவ்வளவு அதிகாரங்கள்’’
“ஹலோ யார் பேசறது’’
“செல்லம்மா  பேசுறேங்க’’
“நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்’’
“மாட்டு லோன் கேக்கறீங்க. எப்படி கட்டுவீங்க’’  
“கயித்தாலதான் சார்’’
“எனக்கு கோவமே வரமாட்டேங்குது டாக்டர்’’
“கவலைப் படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் பில் தரேன்’’
“என்ன இது, ஒரு காலில் பச்சை நிறத்திலும், ஒரு காலில் வெள்ளை நிறத்திலும் சாக்சு போட்டுருக்கீங்க’’
“சொன்னா நம்ப மாட்டீங்க. வீட்ல கூட இதே மாதிரி இன்னொரு ஜோடி இருக்கு’’  
“என்னடி சமைச்சி வச்சிருக்க. வரட்டி மாதிரி இருக்கு”
“கடவுளே இவரு இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப்  பாத்துருக்காரோ’’
“உன்கிட்ட வேலை சொன்னதுக்கு என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்‘’
“எதையும் அவசரப்பட்டு சொல்லாதீங்க. செருப்பு இந்தா இருக்கு. புத்திக்கு எங்க போவீங்க’’
“குரங்க பாத்ததில்லே’’
“இல்ல சார்’’
“கீழ பாக்காத, நேரா என்னைப் பாத்து சொல்லுடா’’
“சாரி சார்’’

-மன்னை வி.ஙி.சுவேதினி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions