c தத்துவதாசன் தத்துபித்துகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தத்துவதாசன் தத்துபித்துகள்

பஸ் ஸ்டாண்டில் பஸ்நிக்கும்
ஆட்டோ ஸ்டாண்டில்
ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்டில்
சைக்கிள் நிக்கும்
கொசுவத்தி ஸ்டாண்டில்
கொசு நிக்குமா?
என்னதான் பொண்ணுங்க
பைக் ஓட்டினாலும்
ஹீரோ ஹோண்டா
ஹிரோயின் ஹோண்டா ஆகாது.
என்னதான் பசங்க
வெண்டைக்காய் சாப்பிட்டாலும்
லேடிஸ் ஃபிங்கர்
ஜென்ஸ் ஃபிங்கர்
ஆகாது.
மனுஷனுக்கு
வீடு, காடு, கரைன்னு
இருந்தாலும்
ரயில் ஏறணும்னா
பிளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகணும்.
இட்லி மாவை வச்சி
இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வச்சி
சப்பாத்தி போடலாம்.
கடலை மாவை வச்சி
கடலை போட முடியாது.
அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்.
மீண்டும் என்னை பார்த்தாள்.
நானும் மீண்டும் பார்த்தேன்.
அவளும் என்னைப்போல
படிக்காமல்
பரிச்சைக்கு வந்துவிட்டாள் போல.
எவ்வளவு பெரிய
வீரனாயிருந்தாலும்
வெயில் அடிச்சா
திருப்பி அடிக்க
முடியாது.
டீ நகர் போனால்
டீ வாங்கலாம்.
விருதுநகர் போனா
விருது வாங்கமுடியாது.
பின்னாடி வீல்
எவ்வளவு வேகமா போனாலும்
முன்னாடி வீலை
முந்த முடியாது.
பில்கேட்ஸோட
பையனா இருந்தாலும்
கழித்தல் கணக்கில்
கடன் வாங்கித்தான்
ஆகணும்.
சண்டே அன்னைக்கு
சண்டை போடலாம்
மண்டே அன்னைக்கு
மண்டைய போட முடியாது.
ஆட்டோக்கு ஆட்டோன்னு
பேர் இருந்தாலும்
மேனுவலாத்தான்
டிரைவ் பண்ணனும்.
இன்ஜினியர் காலேஜ்ல
படிச்சா இஞ்சினியர் ஆகலாம்.
பிரசிடென்சி காலேஜ்ல
படிச்சா பிரசிடென்ட்
ஆகமுடியாது.
‘‘உன் பெயரைக்கூட நான்
எழுதுவதில்லை’’
‘‘பேனா முனை என்னைக்
குத்தி விடுமா டார்லிங்’’
‘‘நோடா செல்லம். ஸ்பெல்லிங் தெரியாது’’
எவ்வளவு பெரிய
டாக்டருன்னாலும்
கம்ப்யூட்டர் வைரசுக்கு
மருந்து தர முடியுமா!
டெய்லி ஒரு பீர்
சாப்பிட்டா
தூக்கம் வரும்.
பத்து பீர் சாப்பிட்டா
தூக்க ஆள் வரும்.

-சௌந்தர்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions