c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

மதிப்புறு முனைவர்
நர்த்தகி நடராஜ்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் 24 ஆவது பட்டமளிப்பு விழா தஞ்சையில் பல்கலைக் கழகத்தின் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, இப்பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை ஏற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க, பல்கலைக் கழக இணை வேந்தர் டாக்டர் வீ.கே.என்.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில் கலைமாமணி நாட்டிய தாரகை நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேற்கு வங்க மேனாள் ஆளுநரும், காந்தி - ராஜாஜி ஆகியோரின் பேரருமான மாண்பமை கோபாலகிருஷ்ண காந்தி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அணிவகுப்பு, மொழி வாழ்த்து, வரவேற்புரை, அறிக்கை வாசித்தல், விழாப் பேருரை, பட்டம் பெறும் மாணவர்கள் அறிமுகப்படுத்தல், பட்டம் வழங்குதல், உறுதிமொழி ஏற்றல், நாட்டுப்பண், விழா அணிவகுப்பு நிறைவேறுதல் என்ற வரிசையில் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்கலைக்கழக குழுவுடன் பல்கலையின் பணியாளர்களும், மாணவர்களும் விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

கோபாலகிருஷ்ண காந்தி தனது உரையில், ‘‘ராஜாஜியும்- பெரியாரும் கொள்கையால் வேறுபட்டிருந்தாலும், நட்பில் சிறந்தவர்களாக விளங்கி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானவர்களாகத் திகழ்ந்தனர். நம் நாட்டு அரசியல்வாதிகள், இவர்களிடமிருந்து இந்தப் பண்பாட்டைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

மாணவ, மாணவியர்களுக்கு நான் அறிவுரைகளை வழங்க விரும்பவில்லை. ஆசிரியர்களும், பெற்றோர்களும் சிறந்தவர்களாக இருந்தால் மாணவர்களும் சிறப்பானவர்களாக வளர்வார்கள். பொறாமை - பகைமை உணர்வு இருக்கக்கூடாது. யாரையும் புண்படுத்தக் கூடாது. வன்முறை, ஏமாற்றும் தன்மை அறவே கூடாது.

நாம் இப்பொழுது ஒரு போட்டி உலகில் இருக்கிறோம். தலைவர்களைத் தேடி அலையாதீர்கள். நீங்களே உங்களுக்குத் தலைவராக இருக்கவேண்டும். உண்மையான தலைவர்கள் அரசியலிலும் இல்லை, வணிகத்திலும் இல்லை. மறைந்தாலும் பெரியார் தலைவராக நம்மிடையே இருக்கிறார். இந்தக் காலத்துக்கும் ஏற்ற பொருத்தமான தலைவர் பெரியார்!’’ என்றார்.

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் தான். கலைமாமணி, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார்  ஆகிய விருதுகளைப் பெற்ற முதல் திருநங்கையும் இவரே. ‘பால்திரிபு என் வளர்சிக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை’ என்கிற இந்த நாட்டிய தாரகைக்கு பல்சுவை காவியம் தன் வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

-சௌந்தர்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions