c தெரிஞ்சிக்கங்க...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சிக்கங்க...

ஆங்கிலத்திலும்...
அசோகமித்திரனின் பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் மூன்று நூல்கள் ஆங்கில வடிவம் பெற்றுள்ளன. ‘பாவம் டல்பதடோ’ என்ற நூலும், ‘இருட்டிலிருந்து வெளிச்சம்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு பகுதியும், பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஜெமினி ஸ்டூடியோவில் அசோகமித்திரன் பணியாற்றிய 14 ஆண்டு அனுபவங்களைப் பிரதிபலிக்கும் நூலை அவரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். மூன்று புத்தகங்களையும் பென்குயின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

விருது
‘நந்தா விளக்கு’ இலக்கிய அமைப்பின் சார்பில் மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருதுகள் பேராசிரியர் தொ.பரமசிவன், நாவலாசிரியர் ஆர்.எஸ். ஜேக்கப், வரலாற்று ஆய்வாளர் செ.திவான் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவுடையான்
நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் கோமதிபுரம் 5-வது தெருவை சேர்ந்த திருவுடையான் (வயது 48), எதிர்பாராத விதமாகச் சாலை விபத்தில் காலமானார். மக்கள் பிரச்சனைகளை நாட்டுப்புறப் பாடல்களாகத் தமிழகத்தின் பல மேடை களில் பாடியிருக்கிறார். மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் பாடல்கள் அவை. விருமாண்டி, மதயானைக் கூட்டம், மயிலு ஆகிய திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார். சில பெரிய நிறுவனங்கள் அழைத்தும் போகாமல் மக்களுக்காக மட்டுமே பாடுவேன் என மறுத்துவிட்ட மகா கலைஞர். பல்சுவை காவியம் அவரது நினைவை என்றும் போற்றுகிறது.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions