c கண்டதைச் சொல்கிறோம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்டதைச் சொல்கிறோம்

ஒலிம்பிக்  இன்று வென்றவர்களும்  நாளை வெல்லப் போகிறவர்களும்

லிம்பிக் என்ற வார்த்தையே கி.மு. 776-இல் தான் உலகுக்கு அறிமுகமாகி இருக்கும். அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன். ஏனெனில் அந்த ஆண்டில்தான் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஓரிடத்தில் குழுமி, விளையாட்டுத் துறையில் தங்கள் திறமைகளைக் காட்டிப் பரிசுகளைப் பெற்றார்கள்.
இந்த விளையாட்டு நடந்த இடம் கிரேக்க நாட்டில் இருந்த ஒலிம்பியா என்கிற இடம், பின் அந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒலிம்பிக் எனப் பெயர் வந்தது.
விளையாட்டு என்பது, மனிதர்களுக்குள் பொதிந்திருக்கும் மாபெரும் திறமைகளுள் ஒன்று. அதைப் பல நாடுகள் கண்டுகொண்டு, அந்த வீரர்களையும், வீராங்கனைகளையும் கௌரவிக்கத் தொடங்கின.

இந்தியா, கொஞ்சம் கொஞ்சமாக உலக அரங்கில் பிரவேசிக்கத் தொடங்கிய போது இந்திய விளையாட்டு வீரர்களின் முகம் இந்தியர்களுக்கே தெரிய ஆரம்பித்தது.
அண்மைக் காலத்தில் வெள்ளியும் வெண்கலமும் ஆக, பல வெற்றிப் பதக்கங்களை நம் வீரர்கள் பெற்று, நம் தேசத்துக்குப் பெருமை தேடித் தந்தனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வதும், பரிசுகள் பெறுவதும் இந்தியர்களாகிய நமக்குப் பெருமையும், மதிப்பும், மரியாதையும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
அதேநேரம், நமது மரியாதைக்குரிய வீராங்கனைகள், எல்லாக் காலத்திலும் எல்லாப் போட்டியிலும் வெற்றி பெற்றுத் தங்கம் அள்ளிக்கொண்டு வருவார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது, தவறான ஒரு எதிர்பார்ப்பு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டு என்பது, இரண்டு இடங்களிலும் இருக்கும் தங்கள் திறமை சார்ந்த வீரர்களின் மோதல் என்பதையும், சில வேளைகளில் வெற்றி ஒருவர் பக்கமே சாரும் என்பதையும் புரிந்து கொண்டால், எந்த வீரரும், வேண்டுமென்றோ, விரும்பாமலோ தோற்றுப் போவதில்லை.
ஒரு விளையாட்டு வீரர் சொன்னார். ‘காற்று மட்டும் எனக்கு எதிராகப் போகாமல் இருந்தால், நான் வெற்றி    பெற்று இருப்பேன்.’
காற்றின் மேல் குற்றம். இம்மாதிரி இயற்கை சார்ந்த பல பிரச்சனைகளை வீரர்கள் சந்தித்தே தீர வேண்டி இருக்கிறது.
விளையாடும் நேரத்தின் மனநிலை, உடல்நிலை, சூழ்நிலை இவை அனைத்தையும் பொறுத்தே வெற்றியும் தோல்வியும் அமைகிறது.
ஆகவே, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நேரத்தில், வெற்றி பெறாதவர்களையும் நாம் கவனத்தில் கொண்டு, ஆதரவும் அன்பும் செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
ஒரு நல்ல ஆசிரியர் சிறந்த மாணவனைக் காட்டிலும், சுமாரான மாணவனின் மேல்தான் கூடுதல் கவனம் கொள்வார்.
வெற்றிபெற்று வெள்ளியையும், வெண்கலத்தையும் இந்தியாவுக்கு கொண்டு  வந்த வீரர்களுக்கு, அவர்களின் மாநில அரசுகள் பணமும், கௌரவமும் தந்து மகிழ்ச்சியூட்டி இருக்கின்றன. இது பல கோடி பெறுமானம் உள்ள பரிசுகள். இது சரி.
ஆனால், அதே நேரம், பரிசு பெற வாய்ப்பற்றவர்களையும் மாநில, மத்திய அரசுகள் கௌரவிக்க வேண்டும். மரியாதையும், பரிசும், பணமும் நல்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனதில் அயர்ச்சி தோன்றாது. களைப்பும் தோன்றாது. மாறாகத் தாம் புறக்கணிக்கப்படவில்லை என்கிற திருப்தியும் தோன்றும். புதியவர்களின் வருகைக்கும் ஊக்கமாக இருக்கும்.
ஒரு தாயின் மனநிலை நமக்கு இதில் வேண்டும். நல்ல, ஆரோக்கியமான பிள்ளைகளைக் காட்டிலும் சுமாரான பிள்ளைகள் மேல் தாய் காட்டும் அக்கறை நமக்கு இதில் வேண்டும்.
நமது விளையாட்டுத் துறை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. நாம் இதற்குள் பிரவேசிக்க விரும்பவில்லை. ஒன்றை நாம் சொல்லாம்.
இன்றும் போதுமான காலணிகள் கூட வாங்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான வீரர்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வளர்நிலை வீரர்களில் பலர் தங்கம் வெல்லும் வீரர்களாக இருக்கக் கூடும்.
விளையாட்டுத் துறையில் ஊழல் தலை தூக்கும் என்றால், அந்த நாடு விளையாட்டில் தலை எடுக்காது. இனி, விளையாட்டிலும், வேறு எந்த இடத்திலும், இரண்டு சொற்கள் மட்டுமே  பேசப்பட வேண்டும், குறிப்பாகப் பள்ளிகளில். வெற்றி பெற்றவர், வெற்றி பெற இருப்பவர் என்று இரண்டு வகைப் பிரிவே இருக்க வேண்டும்.
தோல்வி என்ற சொல்லையே, சமூகம் பயன்படுத்தாத நிலையை நாம் உருவாக்க வேண்டும். தோல்வி என்பது தற்காலிகமானது, வெற்றி என்பதே நிலையானது.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions