c ஹி...ஹி... பஜார்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஹி...ஹி... பஜார்

‘‘மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீர்?’’
‘‘ மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லிட்டான்’’
‘‘நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே!’’
‘‘அதைத்தான் சொல்லிட்டான்’’

‘‘ எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்’’
‘‘அப்புறம்?’’
‘‘ நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்’’

“ செக்யூரிட்டி வேலை கேக்கறியே, உனக்கு என்ன தகுதி இருக்கு?”
“சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!”

‘‘அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்’’
டேய் மச்சான், ‘பிகர்டா!’

‘‘கஞ்சன் அப்படின்னா என்னப்பா?’’
‘‘கண்ணிலே காசையே காட்டாதவன்தாண்டா கஞ்சன்’’
‘‘காசுன்னா என்னப்பா!’’

‘‘எதுக்குடா அவன அடிச்சே”
“ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு
சொன்னான்”
“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”
‘’நேத்து தான் தேவாங்க பாத்தேன்!”

‘‘நேத்து ராத்திரி பரிட்சைக்குப் படிச்சேன்னு சொன்ன. ஆனா உன் ரூம்ல ராத்திரி லைட்டே எரியலியே’’
‘‘படிக்கிற இன்ட்ரஸ்டுல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா’’

‘‘ஏன்டா உஜாலா பாட்டில கீழ போட்டுத் தாண்டிக்கிட்டு இருக்க’’
‘‘நாளைக்கு எங்க ஸ்கூல்ல நீளம் தாண்டும் போட்டி இருக்கு. அதான் ப்ராக்டீஸ் பண்றேன்’’

‘‘இன்பம் வரும்போதும் சிரிங்க. துன்பம் வரும்போதும் சிரிங்க’’
‘‘லூசுன்னு சொல்ல மாட்டாங்களா சார்’’

‘‘அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’’
‘‘அப்படின்னா’’
‘‘சாப்பிட்டபிறகு சரக்கடிக்கப் படாதுன்னு அர்த்தம்’’

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions