c தெரிஞ்சிக்கங்க...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சிக்கங்க...

தமிழ் இலக்கியத்தில் நீர்நிலைகள்
அகழி  -  கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
ஆழிக் கிணறு - கடலுக்கு அருகே தோண்டிய கிணறு
ஆறு  - பெருகி ஓடும் நதி
இலஞ்சி - பலவகை பயன்பாட்டுக்கான நீர்த் தேக்கம்
உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
ஊருணி - மக்கள் பருகும் நீர் நிலை
ஊற்று - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த் தேக்கம்
ஓடை  -  அடியிலிருந்து ஊற்றெடுத்து எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
கட்டுங்கிணக் கிணறு  -  சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் போன்றவற்றால் சுவர் கட்டிய கிணறு.
கடல்  - சமுத்திரம்
கண்மாய் (கம்மாய்)  -  பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
கலிங்கு - ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம். உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
கால்  - நீரோடும் வழி
கால்வாய் - ஏரி, குளம், ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
குட்டம்  - பெருங் குட்டை
குட்டை - சிறிய குட்டம். மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை
குண்டம் - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
குண்டு  - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
குமிழி - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
குமிழி ஊற்று - அடி நிலத்து நீர், நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
குளம் - ஊர் மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை
கூவம் - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
கூவல் - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
வாளி - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரம்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை
கேணி - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு
சிறை - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
சுனை - மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை
சேங்கை - பாசிக்கொடி மண்டிய குளம்
தடம் - அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்
தளிக்குளம் - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை
தாங்கல் - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
திருக்குளம் - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்
தெப்பக்குளம் - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
தொடு கிணறு - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.
நடை கேணி - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு
நீராவி - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
பிள்ளைக்கிணறு - குளம், ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
பொங்கு கிணறு - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
பொய்கை - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
மடு - ஆற்றிடை உள்ள அபாயமான பள்ளம்
மடை - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
மதகு - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை
மறு கால் - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
வளையம் - வட்டமாய் அமைந்த குளம்
வாய்க்கால் - ஏரி முதலிய நீர் நிலைகள்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions