c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

லெனின் விருது 2016
மாற்றுத் திரைப்படக் கலைஞர்களைக் கொண்டாடும் விதமாக படத்தொகுப்பாளர் பி. லெனின் பெயரிலான ‘லெனின் விருது’ என்ற விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது  தமிழ் ஸ்டுடியோ. இந்த ஆண்டுக்கான விருது, ஆவணப்பட இயக்குநரான தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வடபழனி பிரசாத் ரெக்கார்டிங் திரையரங்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. இயக்குநர் அனுராக் காஷ்யப், ஆய்வாளர் வ.கீதா, எழுத்தாளர் சாரு நிவேதிதா, இயக்குநரும் கவிஞருமான லீனா மணிமேகலை, எடிட்டரும் இயக்குநருமான பி. லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். நிகழ்வில் தீபா தன்ராஜின் முப்பது நிமிட ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.
தீபா தன்ராஜ், ஐதராபாத்தில் பிறந்தவர். சென்னை பெண்கள் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களில் பணி புரிந்து வருகிறார். ஐம்பது ஆவணப்படங்களுக்கு மேல் உருவாக்கியுள்ளார்.  உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
உலக மக்களின் வரலாறு
பாரதி புத்தகாலயத்தின் “உலக மக்களின் வரலாறு” என்னும் நூல் வெளியீட்டு விழா மதுரை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் நூலை வெளியிட, ஜி.மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டார்.
எஸ்.ஏ.பெருமாள் பேசுகையில், ​‘தோழர் சுப்பாராவ் அண்​மைக் காலத்தில் நமக்குக் கி​டைத்த பு​தையல். 23 ​பெரிய நூல்க​ளைத் தமிழாக்கம் ​செய்து சாத​னை ப​டைத்திருக்கிறார். மின்ன​லைப்​போல் வாசிக்க வேண்டும், இடிமுழக்கமாய் அதைப் ​பேசவேண்டும், ம​ழையாய் ​பொழிந்து எழுத வேண்டும் என்று ஜீவா பேசியதை குறிப்பிட்ட அவர், அந்த ​வேகம் சுப்பாராவிடம் இருக்கிறது’ என்றார்.
சுப்பாராவ் தனது ஏற்புரையில், ‘760 பக்கம் உள்ள ஆங்கிலப் புத்தகத்தை இருமுறையும், தமிழில் நான் மொழிபெயர்த்த என் கைப் பிரதியை இரு முறையும், பின்னர் மெய்ப்புப் பார்க்க இரு முறையுமாக, 760 பக்கத்தை ஆறுமுறை படித்தேன். மொழிபெயர்த்து எழுதிய நேரம் தனி. அத்தனை கஷ்டமும் நூல் வெளியீட்டு விழா தந்த மகிழ்ச்சியில் காணாமல் போனது’ என நெகிழ்ந்தார்.
ஆர்.சூடாமணி
எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நினைவு நாளையொட்டி ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பாக நடந்த நிகழ்வில், ஆர்.சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்‘ சிறுகதையை மேடையேற்றினார்கள்.
நான்காம் ஆசிரமம் 1972 ஆம் ஆண்டு இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை.
கன்னிப்பருவம், இளமைப் பருவம், அறிவு சார்ந்த மூன்றாம் பருவம் என வாழ்வின் பல நிலைகளைக் கடக்கும் பெண்ணின் மனப்போக்கை நுட்பமாகச் சித்தரிக்கும் இந்தச் சிறுகதையைத்தான் மேடையேற்றினார் கருணா பிரசாத்.கருணா பிரசாத்தின் நடிப்பு அரங்கில் பிரமிப்பூட்டியது.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, எழுத்தாளர் பிரபஞ்சன், சூடாமணி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

-ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions