c செப்டம்பர் 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 2016, மாத இதழ்

தலையங்கம்

தலையங்கம்

தனிமனித வன்முறையும் சமூக வன்முறையும்

காலையிலும் மாலையிலும் அச்சடிக்கப்பட்டு நமக்கு வரும் செய்திகள், காட்சி ஊடகங்களில் காண்பிக்கப்படும் செய்திகள், சமூகம் குறித்த அக்கறை கொண்டவர்களின் அமைதியைக் குலைப்பவையாக இருக்கின்றன என்பதை எவர் மறுக்க முடியும்?
பத்தும் பனிரெண்டுமான வகுப்பு மாணவர்களின்... Read more

புதிய தொடர் உலக சினிமா

புதிய தொடர் உலக சினிமா

அஜயன் பாலா

எங்கே என் நண்பன் அப்பாஸின் வீடு?
ஈரானிய இயக்குனர்  
அப்பாஸ் கியாரோஸ்தமி
ஈரானின் அறிவுலக இலச்சினை அப்பாஸ் கியாரோஸ்தமி  கடந்த மாதம் இறந்த போது உலகசினிமாவின் ஒரு அடையாளம்   தன்னை அழித்துக்கொண்டதாகவும், ஒரு மைல்... Read more

தெரிஞ்சுக்கங்க...

தெரிஞ்சுக்கங்க...

பெருமை
கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2016க்கான ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட் டுள்ளது. கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதற்காகவும் இவ்விருது  டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இசைத்துறையில்  தமிழகத்தைச் சேர்ந்த, எம்.எஸ்.சுப்புலட்சுமி... Read more

யாவரும் கேளிர் - 4

யாவரும் கேளிர் - 4

சிவசங்கரி

அறிதலும் அறிந்து கொள்ளப்படுவதுமே வாழ்க்கை. அதுதான் நட்பிற்கும். வாருங்கள், என்னோடு சற்று நடக்கலாம். என் நண்பர்களும் காத்திருக்கிறார்கள், உங்களைச் சந்திக்க.
நடந்து செல், சுவடுகள் பின்னால் வரும்
எனக்குத் தமிழ் எழுத்தாளர்கள் மீது ஒரு மனக்குறை உண்டு.Read more

ஹிஹி பஜார்

ஹிஹி பஜார்

“அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில்  பேசலைன்னா என்ன அர்த்தம்?”
“எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.”

“இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!”
“அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?”
“உன் வளையலை வைச்சுத்தான்... Read more

காலந்தோறும் கவிதை மாறும்!

காலந்தோறும் கவிதை மாறும்!

புவியரசு
கவிஞர் புவியரசு, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, நாடகம், பேச்சு என்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மொழிபெயர்ப்புக்காக, மூலப் படைப்புக்காக என இரண்டு முறை சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். வானம்பாடிக் கவிஞர்களில் இன்றுவரை... Read more

தெரிஞ்சுக்கங்க

தெரிஞ்சுக்கங்க

தெரியுமா?
அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுகொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

சுக்கு
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத்... Read more

நாமிருக்கும் நாடு-30

நாமிருக்கும் நாடு-30

இசைப் பேரரசி

எம்.எஸ்.சா.வைத்தியநாதன்
இது எம்.எஸ் அவர்களின் பிறந்த மாதம் மட்டுமல்ல. இந்த 2016ஆம் ஆண்டு அந்த இசைப் பேரரசியின் நூற்றாண்டும்கூட.
எம்.எஸ் என்பது மதுரை ஷண்முகவடிவு சுப்புலட்சுமி என்ற பெயரின¢ அன்புச் சுருக்கம். இந்த எம்.எஸ். அம்மா,... Read more

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 17

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 17

மின்மினிகளும் நட்சத்திரங்களும் - 2

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு வானத்து நட்சத்திரங்கள் போல் ஆயிரம் பதில்கள். ஒன்றுபோல் ஒன்றில்லை.
தேவதேவனைக் கேட்டால் ‘கலையின் உன்னத ரூபமே கவிதை’ என்கிறார். அந்த உன்னத... Read more

சிறுகதை

சிறுகதை

கஜிகஜி புடவை

உமாமோகன்

“ஐயோ... ஒரு தடவ நனச்சாலே  இப்பிடி ஆயிட்டா” பளபளவென்ற இளம் சந்தன நிறத்தில் பச்சைப் பூக்கள் இறைந்த அந்தப் புடவை எப்படி ஊரையே கொள்ளையடித்தது. இன்று தண்ணீரில் போட்டதும் பச்சை கலங்கி இளம் சந்தனத்தில் இறைந்து... அதன்... Read more

நமது நூலகம்

நமது நூலகம்

வாழக் கற்றுக் கொடுக்காத கல்வி

பேராசிரியர் நா.முத்துநிலவன், தன் ஆசிரியப் பணி மூலம் பெற்ற நேர் அனுபவங்கள் மற்றும் தம் கல்விச் சிந்தனைகளைக் கொண்டு அடைந்த கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தொடர்ந்து மேடைகளில் பேசிக்கொண்டும், இதழ்களில் எழுதிக்கொண்டும் இருப்பவர். சமூக முன்னேற்றம்... Read more

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

பிறப்பும் இருப்பும்

கவிஞர் ஞானக்கூத்தன் (1938-2016) ஜூலை  மாதத்தின் கடைசிப் பொழுதுகள் ஒன்றில் மறைந்துவிட்டார். தகவல் கிடைத்தபோது திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் காலைக் காஃபிக்காக அமர்ந்திருந்தேன். தமிழ்மணவாளன் புத்தகம் வெளியீட்டு விழாவில், அண்மையில்தான் நானும் அவரும் கலந்துகொண்டோம். நிறைய பேசிக்... Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்

அமுது

அன்னதானத்திற்கு இன்னொரு பெயர் அமுது.
குடும்பத்தில் வறுமை ஏற்பட்டு சோற்றுக்கே அல்லாடும் சூழல் ஏற்பட்டவர்கள் முருகப் பெருமானிடம், ‘அப்பனே மொட்டையாண்டி, முருகா, எம் பொழப்ப நல்லா மேடேத்தி, இந்த சோத்துப் பஞ்சத்த தெளிய வச்சிட்டா, எஞ் சமுத்துக்கு... Read more

உலகச் சிறுகதை

உலகச் சிறுகதை

அவநம்பிக்கைவாதத்தின் குற்றம்

ஹங்கேரி: ஜார்ஜ் பேலிண்ட்
தமிழில்: சா. தேவதாஸ்

ஜார்ஜ் பேலிண்ட் (19061943) ஹங்கேரியின் எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர். நாஜி சித்திரவதை முகாமில் இறந்து போனார்.
ஆங்கில மொழியாக்கம்: விட் பர்னெட்.

மாலைநேரம்.

கதவில் சாவி... Read more

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரான நா.முத்துக்குமார் ஆகஸ்ட் 14, 2016 அன்று மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 41. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார், நான்கு வயதில் தாயை இழந்தவர். தமிழாசிரியரான அவரது தந்தை, தனது... Read more

லிங்குசாமி கவிதைகள்

லிங்குசாமி கவிதைகள்

குழந்தைகள் விளையாடும் மரத்தடியில்
பழத்தை நழுவவிடுகிறது
அணில்.

ஒரு மரம் வைக்கும்போது
நீங்கள் ஒரு
புத்தனையும்
வரவேற்கிறீர்கள்.

தற்கொலை செய்துகொள்ள மனமில்லை,
கிணற்றில்
நிலவைப் பார்த்தபிறகு.

முதலில் தண்ணீர் இல்லை என்றார்கள்
இப்போது
ஆறே இல்லை என்கிறார்கள்.

வீட்டில் நிகழ்ந்த மரணம் அறியாமல்
எப்போதும்போல் கூவிக்கொண்டிருக்கிறதுRead more

தெரிஞ்சுக்கங்க!

தெரிஞ்சுக்கங்க!

உடல் அட்டவணை

விடியற்காலை 3.00 - 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்ய ஏற்ற நேரம். ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில்... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions