c தெரிஞ்சுக்கங்க...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சுக்கங்க...

பெருமை
கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2016க்கான ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட் டுள்ளது. கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதற்காகவும் இவ்விருது  டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இசைத்துறையில்  தமிழகத்தைச் சேர்ந்த, எம்.எஸ்.சுப்புலட்சுமி இவ்விருதைப் பெற்றுள்ளார்.

முதல் பெண்
2016க்கான  ‘சங்கீத கலாநிதி’ விருது வயலின் இசைக் கலைஞர்    ஏ. கன்யாகுமரிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் முதல் பெண் வயலின் கலைஞரும் இவரே. இவர், மறைந்த திருமதி. எம்.எல். வசந்தகுமாரியின் மாணவி. 19 ஆண்டுகள் அவருடன் வயலின் வாசித்துள்ளார்.


மகிழ்ச்சி!
ஆகஸ்ட் 15 அன்று ஐ.நா.சபையில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்தர தின  விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடந்ததல்லவா. இதற்கு முன்பு அங்கு இசை நிகழ்ச்சியை நடத்தியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

ஜாதகம்
கவிஞர் விக்ரமாதித்யன் ஜாதகம் கணிப்பதில் வல்லவர். தன் நண்பர்கள் பேசும்போது போனிலேயே அவர்களின் ராசிக்கேற்ற பலன்களைச் சொல்லிவிடுவார்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions