c ஹிஹி பஜார்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஹிஹி பஜார்

“அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில்  பேசலைன்னா என்ன அர்த்தம்?”
“எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.”

“இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!”
“அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?”
“உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்”
- அருணா செல்வம்
------------------
“ஆண்டவன்கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிக்கடா”
“ஆண்டவா! எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக் கொடு”
-குமாரவேல்
------------------
“என் பேரை தர்மம்னு மாத்திக்கச் சொல்றீயே, ஏம்பா?”
“தேர்தல்ல நீங்க தோத்துட்டாக்கூட ‘தர்மம்’    தோத்துப் போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!”
-வைரத்தமிழன்
------------------
“நான் இந்தக் கோயிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன். தெரியுமா?”
“உங்க வீடு என்ன அவ்வளவு தூரமாவா இருக்கு?”
- போகானந்தன் கணேசன்
------------------
“பக்கத்து வீட்டு பையன் ராத்திரி நெருப்புடா நெருப்புடான்னு கத்திக்கிட்டே இருந்தான். நான் அவன் ரஜினி ஃபேனா  இருப்பானு படுத்திட்டேன்”
“அப்புறம்”
“காலைல அவங்க வீடு சாம்பலா இருக்கு!”
- தேவ்
------------------
“உங்க சொந்த ஊர் எது?”
“அந்த அளவுக்கு வசதி இல்லீங்க, சொந்த வீடுதான் இருக்கு!”
- மலர்கொடி

“ஹலோ டாக்டர், உங்களை வந்து பாக்கணும்.
நீங்க எப்ப ஃப்ரீ?”
“எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது, பீஸ் வாங்குவேன்”
-பனித்துளி சங்கர்

“அந்த தொகுதிக்கு கால்நடையாவே போயி ஓட்டுக் கேக்கலாம்னு இருக்கேன்!”
“மனுஷனாவே போயி கேளுங்க தலைவரே!’’
-----------------
“இந்தப் படத்துல சாப்பட்டைப் பற்றியே கதாநாயகன் அதிக வசனம் பேசுறாரே, ஏன்?”
“இது லஞ்ச் டயலாக்காம்.”

-வைரத்தமிழன்


 

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions