c நா.முத்துக்குமார்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நா.முத்துக்குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரான நா.முத்துக்குமார் ஆகஸ்ட் 14, 2016 அன்று மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 41. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார், நான்கு வயதில் தாயை இழந்தவர். தமிழாசிரியரான அவரது தந்தை, தனது ஊதியத்தின் 20 சதவிகிதத்தில் புத்தகங்கள் வாங்கிச் சேர்த்து, வீட்டிலேயே நூலகம் கட்டித் தன் மகனுக்குத் தமிழின் முகத்தைக் காட்டி வளர்த்தார். அதனால் சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குநராகப் பணியாற்ற விரும்பி இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்தார். இவரது ‘பட்டாம் பூச்சிகள் விற்பவன்’ கவிதை நூல் பரவலாகக் கவனம் பெறவே திரையில் பாடல் எழுதும் வாய்ப்புகள் வந்தன. கவிஞர் அறிவுமதியின் அரவணைப்பில் பாடல் எழுதும் பயிற்சியை மேற்கொண்டார். ‘வீர நடை’ படத்தில் பாடலாசிரியராக திரைப்பயனத்தைத் தொடங்கினார். 1500 பாடல்களுக்கு மேல் எழுதி,  இந்த தலைமுறையின் பாடலாசிரியராக வலம் வந்தார்.
மனைவி தீபலஷ்மி. ஆதவன் என்ற மகனும், யோகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். பட்டாம்பூச்சிகள் விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, தூசிகள், குழந்தைகள் நிறைந்த வீடு ஆகிய கவிதைத் தொகுதிகளையும், கிராமம் நகரம் மாநகரம்,ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, பால காண்டம், வேடிக்கைப் பார்ப்பவன் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார்.
கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது, அயன், வெயில் திரைப்படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது, தங்க மீன்கள் (ஆனந்த யாழை), சைவம் (அழகு அழகு)  படப் பாடல்களுக்காக தேசிய விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
காஞ்சிபுரத்தை மையமாக வைத்து ‘சில்க் சிட்டி‘ எனும் நாவல் எழுதவேண்டும், உலகத்  தரத்திற்கு திரைப்படமொன்று இயக்கவேண்டும் எனப் பல லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்த முத்துக்குமாரை ஒரு திரைப்பட இயக்குநராகவும் நாவலாசிரியராகவும் நாம் காண முடியாதபடி செய்துவிட்டது அவரது மறைவு.
பல்சுவை காவியம் முத்துவின் நினைவை என்றும் போற்றுகிறது.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions