c தெரிஞ்சிக்கங்க!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சிக்கங்க!

புதினா நீர்

வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலின் ஆற்றல்  வேகமாக குறையும். அச்சமயத்தில் ஆற்றலைத் தக்க வைக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும், உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் புதினா தண்ணீரை தினமும் குடிக்கலாம்.

இந்தப் புதினா நீரைப் பருகுவதால் கோடையில் ஏற்படும்  செரிமானக் கோளாறுகள் சரியாகும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அதிகம் உள்ளன.

குமட்டல் பிரச்சனை வராது. குறிப்பாக கர்ப்பிணிகள் காலை சந்திக்கும் சோர்வை  இது  தடுக்கும்.

முகப்பரு தொல்லை இருக்காது. முகத்தில் எண்ணெய் வழியும் தன்மை சரியாகும். சருமப் பொலிவு மேம்படும்.

இதைப் பருகுவதால் சுவாசப் பாதைகள் சுத்தமாகி, சுவாசிப்பதில் உள்ள பிரச்சனைகள் அகலும். முக்கியமாக இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

கோடை காலத்தில் மாதவிடாய் பிரச்சனைகளான அடிவயிற்று வலி, பிடிப்புகள் போன்றவற்றிற்கு இந்த நீர்  நல்ல தீர்வு.

புதினா நீரைக் குடிப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்.

கோடையில் உடல் எடையை வேகமாக குறைக்க  உதவும்.

புதினாவில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும். வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

எப்படிச் செய்வது!

ஒரு பெரிய ஜாடியில் நீரை நிரப்பி, அதில் சிறிது புதினா இலைகள், எலுமிச்சை துண்டுகள், வெள்ளரிக்காய், சிறிது தட்டிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, வேண்டிய நேரத்தில் பருகலாம்.

- மன்னை வி.ஙி.சுவேதினி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions