c நகரில் நடந்தவை:
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை:

இளைஞர்கள் கடமையை உணரவேண்டும் ! - மதுரை கம்பன் கழகம்

இளைஞர்களின் இலக்கிய வாசிப்பை அதிகப்படுத்தி அதன் மூலமாக  திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், நற்றிணை போன்ற நிகரற்ற இலக்கியங்கள் சொல்லும் அறத்தையும், மானுட நேசத்தையும், கலை மனத்தையும் இளைஞர்களிடம் வளர்த்தெடுக்கவேண்டும்  என்கிற உன்னதமான நோக்கத்தில் ஆண்டுதோறும் இலக்கிய ஆண்டு விழாவை நடத்தி வருகிறது மதுரை கம்பன் கழகம்.

இந்த ஆண்டிற்கான விழா மதுரை ஆண்டாள்புரத்தில் 22.05.2016 ஞாயிற்றுக்  கிழமை நடைபெற்றது.

விழாவில், ‘முனிவர் மூவர்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கம்பன் கழகப் புரவலர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தார்.

இதைத்தொடர்ந்து ‘கம்பனைப் போற்றும் கவிகள்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.இதற்கு  கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமை  வகித்தார்.

இதையடுத்து ‘கம்பனில் சிறு பாத்திரங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, பல்சுவை காவியம் இலக்கிய இதழின் ஆசிரியரும், காவியன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கி  விழாவைச் சிறப்பித்தார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தினார். பேராசிரியர் விசாலாட்சி, அனுக்கிரகா, கி.சிவக்குமார், உமாமகேஸ்வரி, முத்துச்சந்தானம், கோ.மணிவண்ணன், பேராசிரியர் த.ராஜாராம், ராமசௌந்திரவல்லி, ரேவதி சுப்புலட்சுமி, எஸ்.ராஜா, ஆகியோருடன் எஸ்.சுவாமிநாதன், அ.புருஷோத்தமன், ஆர்.வேலுச்சாமி, ஆர்.முத்தையா, எஸ்.கணபதிராமன், பி.ராம்குமார் உள்ளிட்டோரும்  கலந்துகொண்டனர்.

விழாவில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த ஆர்.சங்கீதா ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டு பேசுகையில், ‘‘திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களின் அருமை வெகு இளைஞர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் அவர்களது வாழ்வு நெறிப்படும். எனவே இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவேண்டும். நிறைய வாசிக்கவேண்டும். அதன்மூலம் சமூகத்தில் தமக்கான கடமையை உணரவேண்டும்’’ என்றார்.

- ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions