c தெரிஞ்சிக்கங்க!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சிக்கங்க!

காமராஜரும் நேருவும்

கூட்டமொன்றில் பங்கேற்க மதுரை அருகே காரில் சென்று கொண்டிருந்தார்கள் காமராசரும் நேருவும். உரையாடலின் நடுவே நேரு, “மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே?’’ என்று கேட்கிறார்.
“ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது’’ என்கிறார் காமராஜர்.
“அப்படியானால் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்ல வேண்டும் அல்லவா’’ என்று நேரு அவர்கள் கேட்க, “இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே?’’ என்று காமராஜர் மறுத்தார்!
நேரு அவர்கள், “இவ்வளவு தூரம் வந்து விட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நான் பார்த்தே ஆகவேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்!’’ என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
ஆமோதித்த காமராஜர்,  வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம், “தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டுப்பா!’’ என்கிறார்.
அது வீடுகளே இல்லாத இருபுறங்களிலும் விவசாய நிலங்கள் உள்ள பகுதி! அந்த நிலங்களில் பெண்கள் களைப் பறித்துக்கொண்டிருந்தனர்.
தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு.
காமராஜர், களைப் பறித்துக்கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்தை நோக்கி, “ஆத்தா நான் காமராசு வந்து இருக்கேன்!’’ என்று கூவுகிறார்.
வயலிலிருந்து வியர்த்த முகத்துடன், “காமராசு வந்திட்டியாப்பா, நல்லாயிருக்கியா?’’ என்று உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் வயதான பெண்மணி ஒருவர், காமராஜரின் தாயார்! தாயும் மகனும் அளவளாவிக்கொள்கிறார்கள். பிறகு நேருவிடம் அம்மாவை அறிமுகப்படுத்துகிறார் காமராஜர்.
தன் முன்னால் நடப்பதை நம்பமுடியாமல் சிலையாக நின்றார் நேரு.

-வி.ஙி.சுவேதினி


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions