c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

சாதனை இளைஞர்களை உருவாக்கும் லீட் இந்தியா

மாணவர்களின் நுண்ணறிவையும் சமூக அக்கறைகளையும் ஊக்குவித்து அவர்களை சாதனை இளைஞர்களாக உருவாக்கி அரசு உயர் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் சமூகத்திற்குப் பொறுப்பான நிர்வாகத்தையும் வளர்ச்சியையும் வழங்க முடியும் என்ற நன்னோக்கில், காவியன் கட்டுமான நிறுவனத்தின் (KPCL) நிதியுதவியுடன்  ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் முகாம்களை நடத்தி வருகிறது, ‘லீட் இந்தியாÕ (LEAD INDIA)இயக்கம்.
ஆசிரியர் நிர்வாக அறங்காவலராகவும், திருமதி.அனிதா அறங்காவலராகவும் கொண்டு செயல்பட்டு வரும் காவியன் அறக்கட்டளையின் லீட் இந்தியா (லிணிகிஞி மிழிஞிமிகி) என்ற இந்த இயக்கத்திற்கு காவியன் கட்டுமான நிறுவனம் தொடர்ந்து பொருள் உதவி வழங்கி வருகிறது.
இந்த ஆளுமைத்திறன் வளர்ப்பு முகாமிற்கு மாணவர்களிடமிருந்தோ, பிற அமைப்புகளிடமிருந்தோ, எந்தவிதக் கட்டணமும் காவியன் அறக்கட்டளை வசூலிப்பதோ, பெற்றுக்கொள்வதோ இல்லை.
இந்த ஆண்டிற்கான ஆளுமைத்திறன் முகாம் அம்மையநாயக்கனூரில் உள்ள  ‘காவியன் பள்ளியில் 27.04.2016 முதல் 06.05.2016 வரை இனிதே நடந்தேறியது. இது நான்காம் ஆண்டின் எட்டாவது முகாமாகும்.
10 நாட்கள் நடந்தேறிய இம்முகாமில் 38 மாணவ மாணவியர் பங்கேற்று பயன்பெற்றனர். யோகா, காலை சிற்றுண்டி, சதுரங்கம், சிறப்பு வகுப்புகள், மதிய உணவு, ஆங்கிலப் புலமை வளர்ப்பு வகுப்புகள், மாலை சிற்றுண்டி, கைப்பந்து விளையாட்டு, வாழ்க்கைக் கல்வி வகுப்பு, இரவு உணவு, கலந்துரையாடல் என இரவு 10.00 மணி வரை மாணவ மாணவியர் காலம் தவறாது செயல்பட்டு பயன்பெற்றனர்.
04.05.2016 அன்று மாணவ மாணவியர்கள் அருகிலுள்ள சிறுமலைக்குச் சென்றனர். மலையின் உச்சிக்குச் சென்று, சுற்றிலும் பரந்துகிடக்கும் மலைகளையும், மடுவையும் கண்டு மகிழ்ந்தனர்.
விசாகா பள்ளியின் இயக்குநர், மூத்த மேலாண்மைப் பேராசிரியர் ஜோசப் ஜக்கரியா, இரவீந்திர நாத், ரூபா, ராம், வாழ்க்கைக் கல்வி பயிற்சியாளர்கள் கனகசபாபதி, பிஸ்வா,  பாலா, ஆசிரியர் இளங்கோ, ‘ லீட் இந்தியா’ இயக்கத்தின் செயலர் சீனி.கோபாலகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
திரு.இரா.கற்பூரசுந்தரபாண்டியன் ஐ.ஏ.எஸ். (பணிநிறைவு) அவர்கள் தொடக்க உரையாற்றிட, காவியன் குழும நிறுவனங்களின் இயக்குநரும்,  ‘காவியன் அறக்கட்டளை’யின் நிர்வாக அறங்காவலருமான ஆசிரியர் அவர்கள் முகாமைத் தொடங்கி வைத்தார். மாணவ மாணவியர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வரவேற்று உரையாற்றிய அவர், ‘காவியன் அறக்கட்டளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டின் நலன் ஒன்றினை மட்டுமே மனதில்கொண்டு செயல்பட்டு வருகிறது’ என்றார்.
காவியன் கட்டுமான நிறுவனத்திற்கும், பயிற்சியில் உதவும் அனைத்துப் பெரியவர்களுக்கும், காவியன் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள், நல்ல உணவு தயாரித்து பரிமாறிய மைக்கேல் மற்றும் அவரது பணியாளர்கள், முகாமில் தொடர்ந்து நற்பணி செய்து வரும் நாராயணன், மற்றும் பெற்றோர்கள்  ஆகிய அனைவருக்கும் ‘காவியன் அறக்கட்டளை’யின்  உளம் கனிந்த நன்றிகள்.

- சீனி. கோபாலகிருட்டிணன்


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions