c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

மிஸ்டர் தமிழ்நாடு 2016

‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’, ‘உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயம்’ என்றார்கள் நம் சித்தர் பெருமக்கள். ஆகவே வளமான வாழ்விற்கு உடலே பிரதானம். அந்த உடலை ஆரோக்கியமாகவும் கச்சிதமாகவும் வைத்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும் என்கிற வகையில் ஆண்டுதோறும் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ என்கிற ஆணழகன் போட்டியை நடத்தி வருகிறது ‘நியு குலோப் ஃபிட்னஸ் சென்டர் (NGFC)’.
பெப்கோ.அ.குமாரவேலுவைச் சேர்மேனாகவும், வெற்றிதுரைசாமியைத் தலைவராகவும், ஆர்.எல்.திருவேங்கடத்தைப் பொதுச் செயலாளராகவும் எஸ்.குமார நந்தனை பொருளாளராகவும் கொண்டு இயங்கிவரும் இந்த ‘நியு குலோப் ஃபிட்னஸ் சென்டர்’ அமைப்பின் இவ்வாண்டுக்கான ‘மிஸ்டர் தமிழ்நாடு’ சாம்பியன் போட்டி 2016 ஏப்ரல் 24 ஆம் தேதி பாலவாக்கத்தில் உள்ள மேனுவல்மோனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மொத்தம் 216 கட்டுடல் காளைகள் பங்கேற்றார்கள். அவர்கள் 55 , 60 KG, 65 KG,70 KG, 75 KG, 80 KG, 85 KG, +85 KG என்று எட்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 6பேர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து மூவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வெற்றிக் கோப்பையுடன் மெடல், சான்றிதழ் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. எம்.வெங்கடேசன் இவ்வாண்டின் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வசதி செய்யப்பட்டது.
மிஸ்டர் ஆசியா, மிஸ்டர் காமன்வெல்த், மிஸ்டர் யுனிவர்ஸ் ஆகியவற்றையும், எட்டுமுறை மிஸ்டர் இந்தியாவையும் பெற்ற எஸ்.குமாரநந்தன் இந்த ‘அழகர்’ போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். சிலை தடுப்புப் பிரிவு ஜ.ஜி திரு.பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ், காவியன் கட்டுமான நிறுவனம் மற்றும் காவியன் குழும நிறுவனங்களின் இயக்குநர் ஆசிரியர் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். அதைத் தொடர்ந்து, ஆசிரியர் அவர்களும் அவரது புதல்வன் திரு. காவியன் அவர்களும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
இறுதியாகப் பேசிய எஸ்.குமாரநந்தன், ‘இந்தப் போட்டியின் முக்கியமான பலன் பரிசல்ல; ஆரோக்கியமான, மன ஒருங்கிணைப்பான உடல்தான். இதற்கு ஒருவர் பழகிவிட்டால் அவருக்கு போதை வஸ்துக்கள் மீதோ, தீய செயல்களின்  மீதோ மனம் ஓடாது. ஆரோக்கியமான உடல் மனதை அவ்வளவு பக்குவமாக வைத்திருக்கும். திரு.பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ் அவர்களும், ஆசிரியர் அவர்களும் இவ்விழாவைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென ஊக்கமளித்துள்ளனர். அவர்களுக்கு என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக வழங்கிய காவியன் கட்டுமான நிறுவனத்திற்கு என்றென்றும் எமது நன்றிகள்’  என்றார்.
விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் அழகான வருணனையுடன் உற்சாகமாகத் தொகுத்து வழங்கினார் எம்.முருகன். மதுரையில் டி.வி.எஸ் நகரில் வைகை பிட்னஸ் என்ற உடற்பயிற்சி நிலையத்தை 16 வருடங்களாக நடத்தி வருபவர்தான் இந்த எம்.முருகன். பி.காம் கோல்டு மெடல், முதுகலை காந்தியத் தத்துவம் எனப் பயின்ற இவர் கல்லூரிக் காலத்திலேயே மிஸ்டர். மதுரை, மிஸ்டர்.யுனிவர்சிட்டி ஆகிய விருதுக¬ளைப் பெற்றவர். மேலும் மதுரை ஆட்சியாளரிடமிருந்து ‘சிறந்த ஆணழகுப் பயிற்சியாளர்’, லயன்ஸ் கிளப்பிடமிருந்து உலக அரிமா சங்க மாநாட்டில் ‘துரோணர் மாஸ்டர்’, டில்லி உலக இளைஞர் மாநாட்டில் ஷீலா தீட்சித்திடமிருந்து தங்கப்பதக்கம், எம்.எஸ். உதயமூர்த்தியிடமிருந்து ‘மதுரையின் சிறந்த இளைஞர்’ ஆகிய விருதுகளைப் பெற்றவர். மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் குமாரநந்தன் முதலிடம் வென்றபோது இரண்டாவதாக வென்றவர் இவர். தமிழ்நாடு ஆணழகன் சங்கத்தின் மாநில நடுவராக இருக்கிறார். தமிழ்நாடு மருதுபாண்டியர் இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவராக இருந்து சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார்.

- ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions