c தெரிஞ்சிக்கங்க!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சிக்கங்க!

முளை கட்டிய தானிய உணவு
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும். கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டைக் கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிட்டால் சக்தி குறையாமல் இருக்கும்.

வாய்ப்புண்ணுக்கு...
கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்
சீரகத்தை  சம அளவு நாட்டு சர்க்கரையுடன் பொடித்து காலைமாலை
ஒரு தேக்கரண்டி சாப்பிட்டாலும் குணமாகும்
திருநீற்றுப்பச்சையின் 4 இலைகளை மென்று சாறை விழுங்கலாம்.
ஒரு பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்கலாம்.
மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
மணத்தக்காளி இலைகளை மென்று சாறை ஒரு நாளைக்கு ஆறு முறை விழுங்கினாலும் வாய்ப்புண் குணமாகும்

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல்லில் இருக்கின்ற குளோரோபில் உடலில் இருக்கும் தீய நச்சுக் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அழிக்கவும் உதவுகிறது. இதனால் நமது உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளைத் தடுத்திட இயலும்.
அருகம்புல் ஜூஸ் உடலில் நுரையீரல் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இந்த ஜூஸை பருகுவது மிகவும் நல்லது.
இது நமது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது. இதனால் நமது மூளை மற்றும் அனைத்து தசைகளும் நன்கு செயல்படுகிறது.
இதை தினமும் பருகுவதனால் வயிற்றில் இருக்கும் கிருமிகளும் அழியும்.   வயிற்று புண்ணும் குணமாகும்.
அருகம்புல்லில் இருக்கும் குளோரோஃபில்லின் நற்குணம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் குணமடைய உதவுகிறது.
தினந்தோறும் அதிகாலை இதைப் பருகி வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
நுரையீரல் சார்ந்த சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு  தீர்வளிக்க கூடியது அருகம்புல் ஜூஸ்.
இதனை தினசரி பருகுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க முடியும்.
இரத்த சோகை உள்ளவர்களுக்கு இரத்தம் அதிகரிக்கும். இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
உடலில் உள்ள தீமையை விளைவிக்கும் நச்சுக் கிருமிகளை அழித்து உடலில் இருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்கும்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions