c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்

சுதந்திரம் தொடங்கும் இடம், முடியும் இடம் எது?

பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் தான் உலகம். பிள்ளைகளைத்தான் தன் எல்லாமுமாகக் கருதுகிறார்கள். ஏனெனில் பிள்ளைகளின் மூலமாகவே வாழ்வும் குடியும் தழைத்தோங்கிச் செழித்து விரிந்து பெருகுகிறது. ஆகவேதான் பிள்ளைகளிடம் ஆத்மார்த்தமான அன்பும், அதீத செல்லமும் வைக்கிறார்கள். தம்மிடமுள்ள வாழ்வனுபவங்களுடன் எப்பாடு பட்டேனும் நிறைந்த கல்வியையும் தருகிறார்கள். காலமாற்றத்தால் இப்போது தமக்கான கல்வியைத் தேர்ந்தெடுப்பது தொடங்கி, வாழ்வை அமைத்துக்கொள்வது வரை போதுமான சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அந்த சுதந்திரத்தைப் பிள்ளைகள் எந்தளவிற்குப் பொறுப்பாகப் பயன்படுத்துகிறார்கள்? அச்சுதந்திரத்தால் பெற்றோர்களுக்கோ பிள்ளைகளுக்கோ ஏதேனும் பாதகங்கள் நேர்ந்ததுண்டா? முழு சுதந்திரம் இருக்கிறதா? எம்மாதிரியான சுதந்திரத்தைப் பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள்? போன்ற கேள்விகளுடன் இந்த இதழுக்கான இளைய தலைமுறையைச் சந்தித்தோம்.

சில விஷயங்கள் இன்னும் மாறவில்லை!

கார்த்திகா (கல்லூரி மாணவி)
நான் வீட்டுக்கு ஒரே பெண். அப்பா இறந்து விட்டதால் அம்மாதான் என்னை வளர்த்தெடுத்தார். பொறுப்புடன் கூடிய சுதந்திரத்தை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். கல்வி விஷயத்தில் அவரது விருப்பத்தை திணிக்காமல் எனக்குப் பிடித்த இதழியல் படிப்பில் சேர்த்தார். அதற்காகவே கோவை யிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தோம். குடும் பத்தின் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் எனது கருத்துகளைக் கேட்பார். இந்த சுதந்திரம் என் திருமண விஷயத்திலும் இருக்கும் என நம்புகிறேன். இருந்தாலும் உடை வாங்கச் செல்லும்போது அம்மாவும் உடன் வருவார். அவர் விருப்பத்துக்கு ஏற்றபடியான உடைகளைத்தான் வாங்கித் தருவார். இது மாதிரியான சில விஷயங்களில் எனக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை.


சில நிபந்தனைகளுக்கு உட்படுவது நல்லது!
பிரான்சிஸ் விமல் (கல்லூரி மாணவர்)

என் பெற்றோர் எனக்கு எல்லா விதமான சுதந்திரங்களையும் கொடுக்கிறார்கள். நண்பர் களைப் போல்தான் பழகுகிறார்கள். எனது விருப்பத்துக்கு மாறாக எதையும் என்னிடம் திணிக்கவில்லை. இந்த சுதந்திரத்தை நான் சரியாகப் பயன்படுத்துவது மிக அவசியம். எந்தப் பெற்றோருமே தங்களது பிள்ளை தவறான செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக் கமாட்டார்கள். தங்களைவிட தங்களது குழந்தைகள் பல படிகள் முன்னேறிச்
செல்லவேண்டும் என்றே நினைப்பார்கள். இப்படியிருக்கையில் நமக்கு அளவற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறார்கள் என்றால் அது அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே ஆகும். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது பிள்ளைகளாகிய நமது கடமை. படிப்பு உள்ளிட்ட விசயங்களில் சுதந்திரத்துடன்  பெற்றோரின் பொருளாதார
சூழலையும் கருத்தில் கொண்டே  தீர்மானிக்க வேண்டும். ஆகவே நிபந்தனைகளுக்கு உட்படாதது எதுவுமே இல்லை. அதுபோலவே தனி மனித சுதந்திரமும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதே.

எனது வாழ்வை நானே கட்டமைப்பேன்!
சத்யா வேலுச்சாமி
(தனியார் நிறுவன ஊழியர்)

சுதந்திரம் என்கிற வார்த்தையே பெண் களுக்கென்று வரும்போது ஏகப்பட்ட
மாற்றங்களை அடைகிறது. முதலில் அதைப் பொதுச் சொல்லாக கருதவேண்டும் அவர் களாக எனக்களிக்கும் சுதந்திரம் என்பது அநேகமாக சாப்பிடுவதற்கு மட்டுமே எனக் கருதுகிறேன். அதற்காக என் பெற்றோர் என்னை அடிமையாக நடத்து கிறார்கள் என்று அர்த்தமில்லை. என் பாதுகாப்பின் பொருட்டே அப்படி இருக்கிறார்கள். இவை அனைத்தையும் தாண்டித்தான் எனக்கான வாழ்வை, நான் கட்டமைக்க வேண்டியுள்ளது. கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கான சுதந்திரமே பெண்களுக்கு முக்கியமென நினைக்கிறேன். எனது முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு முனைவர் படிப்பைத் தொடங்க என் வீட்டாரை எளிதில் சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவர்களுடைய பெரிய கவலை நான் இவ்வளவு படித்தால் எனக்கு எப்படி மாப்பிள்ளை தேடுவது என்பதாகவே இருந்தது. ஒரு வழியாக சம்மதம் வாங்கிப் படித்து முடித்தேன். இப்பொழுது திருமணம் பற்றிய பேச்சு.  எந்த தாமதமுமின்றி அவர்கள் தம் கடமையை முடிக்க வேண்டும் என  நினைக்கிறார்கள். அதற்காக நான் கட்ட மைக்க விரும்பும்  வாழ்வை விட்டு விட முடியாது.

விரும்பிய வாழ்வுதான் சுதந்திரம்!
மனோஜ் கிஷன் (தனியார் நிறுவன ஊழியர்)

மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் இன்னொருவர் சுதந்திரத்தைப் பறிக்கும் அடக்குமுறை தோன்றாது. பெற்றுவிட்டோம் என்பதற்காக தங்களின் குழந்தைகள் மீது முழு உரிமை எடுத்துக்கொள்ள எந்தப் பெற்றோருக்கும் உரிமை இல்லை. வீட்டில் பெற்றோர்கள், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் என இவர்கள் ஒழுக்கத்தைக் கற்பிப்பதாகக் கூறி அடக்கு முறையைத்தான் மேற்கொள்கின்றனர். கல்வி என்பது எல்லோருக்குமான உரிமை. ஆனால் எல்லோருமே எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க முடியாது. இந்த அடிப்படை புரியாமல் சிறப்பாகப் படிக்கவில்லை என்பதற்காக ஒரு மாணவனை அடிப்பதும் தவறுதான். சுதந்திரம் என்பது தன்னால் இயன்றதைச் செய்து தான் விரும்பிய வாழ்வை வாழ்வதுதான்.
எது சுதந்திரம்?
சாருமதி மணிகண்டன்  (குடும்பத் தலைவி)
தவறுகளுக்காக பிள்ளைகளைத் திட்டுவது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோர்கள் ஒரு முறையாவது அவர்கள் அந்த வயதில் எப்படி இருந்தார்கள் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. தந்தை குடிப் பழக்கத்துக்கு ஆளானவர் எனில் அவரைப் பார்த்து வளர்கிற அவரது மகனும் குடிப் பழக்கத்துக்கு ஆளாக நேரிடும். இது யாருடைய தவறு? மகனுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் காட்டாத ஒரு தந்தையின் தவறுதானே? இப்படியிருக்கையில் அவர் எப்படி மகனை தண்டிக்க முடியும்? தனி மனித சுதந்திரம் என்பதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. தான் சுதந்திரம் எனக் கருதும் ஒன்று மற்றவருக்கு இடையூறாக இருப்பது தவறு. ஊதாரித்தனமாக செலவு செய்வதும், குடிப்பதும் தனி மனித சுதந்திரம் என்றாகிவிடாது. ஆக முதலில் நாம் எது சுதந்திரம்? என்பதைத் தெரிந்துகொண்டு அந்தச் சுதந்திரத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மிடமிருந்து அச்சுதந்திரம் பறிக்கப்பட்டால் அதற்காகப் போராட வேண்டும்.

சமூகம் என்ன சொன்னால் என்ன?
ரம்யா
(தனியார் நிறுவன ஊழியர்)

தனி மனித சுதந்திரத்தை யாராலும் யாருக்கும் வழங்க
முடியாது. நாம் விருப்பப்பட்ட
வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால் அது முழு மையானதாக இல்லை. எங்கள் மீது அக்கறை காட்டுகிறோம் என்கிற பெயரில் பெற்றோர்கள் எங்களது சுதந்திரத்துக்கு தடை விதிக்கின்றனர். பெற்றோரை
மட்டுமே குற்றம்  சொல்ல முடியாது. அவர்கள் இச்சமூகத்தின் ஓர் அங்கம், அவ்வளவே. இந்த சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற வரையறைகளுக்குள்தான் வாழ வேண்டும் என்கிறார்கள். சமூகம் என்ன சொல்லும்? என்று பயந்து பயந்தே இங்கே பலரும் தங்க ளுக்கான சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். நல்ல இளைஞர் என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும் என்கிற வரையறைக்கு நாங்கள் உருவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனி மனித சுதந்திரம் என்று சொன்னால் அதை ஒரு போராளி குணம் போல் சித்தரிக்கும் நிலை மாறவேண்டும். எல்லோரும் அவரவர்களுக்கான வாழ்க்கையை பரிபூரண சுதந்திரத்துடன் வாழ வழி வகுக்க வேண்டும்.

எது சுதந்திரம்?
சாருமதி மணிகண்டன் (குடும்பத் தலைவி)
தவறுகளுக்காக பிஷீமீளைகளைத் திட்டுவது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோர்கஷீமீ ஒரு முறையாவது அவர்கஷீமீ அந்த வயதில் எப்படி இருந்தார்கஷீமீ என்று நினைத்துப் பார்ப்பதில்லை. தந்தை குடிப் பழக்கத்துக்கு ஆளானவர் எனில் அவரைப் பார்த்து வளர்கிற அவரது மகனும் குடிப் பழக்கத்துக்கு ஆளாக நேரிடும். இது யாருடைய தவறு? மகனுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் காட்டாத ஒரு தந்தையின் தவறுதானே? இப்படியிருக்கையில் அவர் எப்படி மகனை தண்டிக்க முடியும்? தனி மனித சுதந்திரம் என்பதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. தான் சுதந்திரம் எனக் கருதும் ஒன்று மற்றவருக்கு இடையூறாக இருப்பது தவறு. ஊதாரித்தனமாக செலவு செளிணிவதும், குடிப்பதும் தனி மனித சுதந்திரம் என்றாகிவிடாது. ஆக முதலில் நாம் எது சுதந்திரம்? என்பதைத் தெரிந்துகொண்டு அந்தச் சுதந்திரத்தை நாம் எடுத்துக்கொஷீமீள வேண்டும். நம்மிடமிருந்து அச்சுதந்திரம் பறிக்கப்பட்டால் அதற்காகப் போராட வேண்டும்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions