c தெரிஞ்சுக்கங்க...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சுக்கங்க...

இரத்தம் விருத்தியாக...

uதினசரி ஒரு வெங்காயத்தைப் பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
uஅடிக்கடி பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
uசெம்பருத்திப் பூவின் நடுவிலிருக்கும் மகரந்தத்தைத் தவிர்த்து சுற்றியுள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
uமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டையை உடைத்து விட்டுக் கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தியாகும்.
uநாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியாகும்.
uஇஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
uதக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாதநோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
uஇலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தைச் சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். பசியையும் தூண்டும்.
uவிளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.


uரத்தத்தைச் சுத்தமாக்க,“அருகம் புல்”
uரத்த அழுத்தத்தை குணமாக்க, “துளசி, பசலைக் கீரை”
uசுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது காய் ஆஸ்துமா, காய்ச்சல் முதலியவற்றை நீக்கும்.
uகர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒருமுறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளைச் சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
uவேப்பம் பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
uதினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
uஅதிக இருமல் ஏற்படும்போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் குறையும்.
uசாதாரண வாயுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
uகாபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடித்தாலும், அடிக்கடி பட்டினி கிடந்தாலும், சிகரெட், மது குடித்தாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.


-தொகுப்பு :  ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions