c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

இந்தியாவில் மட்டுமே மேடை நாடகங்கள் உயிர்ப்புடன் உள்ளன!
- அனுராதா கபூர்

மதுரையை  மையமாகக் கொண்டு இயங்கிவரும் நிகழ்  நாடக மையம், ஜே.வசந்தன் கலை மையம், மதுரை மீடியா ஃபிலிம் அகாடமி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, நாடகத் துறையில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்த  ஆளுமைகளைக் கவுரவிக்கும் வகையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜே.வசந்தன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருதை இவ்வாண்டு முதல் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு(2016)க்கான விருது டெல்லி தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் இயக்குநரும் இந்தியாவின் முக்கியமான நாடக ஆளுமையுமான அனுராதாகபூருக்கு வழங்கப்பட்டது. 17.01.2016 அன்று மதுரையில் நடைபெற்ற சிறப்பான விழாவில் அனுராதா கபூர் இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். அரவிந்த் கண் மருத்துவமனையின் கோவல் அறக்கட்டளைத் தலைவர் சீனிவாசன் இவ்விருதை, அனுராதா கபூருக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, ஜே.வசந்தன் கலை மையத்தின் நிர்வாக இயக்குநர் டி.சின்ராஜ் ஜோசப் ஜெய்குமார் தலைமை வகித்தார். கலை மைய நிறுவனர் சாந்தினி அப்பாதுரை வரவேற்புரையாற்றினார். நிகழ் நாடக மையத்தின் நிறுவனரும், நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான சண்முகராஜா விழாவிற்கு முன்னிலை வகித்ததுடன், அனுராதா கபூரை அறிமுகப்படுத்தி நேர்த்தியானதொரு உரை நிகழ்த்தினார்
விருதைப் பெற்ற அனுராதா கபூர், இந்தியாவில் மேடை நாடகங்களின் பங்கு எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றினார்.
அதில், ‘‘விருதுகள் மகிழ்வானதாக இருந்தாலும் அவை இன்னும் ஊக்கப்படுத்துவதாகவே அமைகின்றன. சுதந்திரப் போராட்டக் கால கட்டத்தில் இந்தியாவில் மேடை நாடகங் களின் பங்கு அளப்பரியது. மக்களிடம் கலையை பரப்பியதிலிருந்து சுதந்திர வேட்கையைத் தூண்டியது வரை எண்ணில டங்காத சாதனைகளை மேடை நாடகங்கள் நிகழ்த்தியுள்ளன.
ஓவியம், புகைப்படக் கலை போன்ற மற்ற கலைகளுக்கும் மேடை நாடகங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அக்கலை வடிவங்களில் கலைஞன் தன்  கற்பனைத் திறனை மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், மேடை நாடகக் கலைஞர்கள் உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் ஈடுபடுத்தி நடிக்கவேண்டும். இல்லையெனில், நாடகம் முழுமை பெறாது. மேடை நாடகங்களில் கலைஞனும், பார்வை யாளனும் ஒன்றிணைந்தால் மட்டுமே அது உணர்வுப்பூர்வமாக வெற்றியடையும். பார்வை யாளர்களுக்காக நாடக கலைஞர்களும், கலைஞர்களாக பார்வையாளர்களும் நாடகங் களில் ஒன்றிவிடுகிறார்கள். இதை மற்ற கலை களில் பார்க்க முடியாது. அத்தனை சிறப்புமிக்கது மேடை நாடகங்கள்.
நானறிந்தவரை இந்தியாவில் மட்டுமே மேடை நாடகங்களில் பல்வேறு வடிவங்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளின் அளப்பரிய வளர்ச்சியால் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. இதனால், மேலை நாடுகளில் நாடகங்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே மேடை நாடகங்கள் இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன. இந்தியர்களுக்கும், கலைக்கும் உள்ள தொடர்பே அதற்கான முக்கியக் காரணம்’’ என்று குறிப்பிட்டார்.
நிகழ்வின் இன்னொரு பகுதியாக பேராசிரியர் ஜே.வசந்தன் நினைவாக வளரும் கலைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. அதன்மூலம்  சென்னையைச் சேர்ந்த ஓவியர் குணசேகர னுக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ஊக்கத்தொகைக்கான சான்றிதழ்  வழங்கப் பட்டது. அதனை பேராசிரியர் சாலமன் பாப்பையா வழங்கினார். பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்ளிட்ட பலருடன், மேடை நாடகக் கலைஞர்களும்  கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.
- ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions