c தெரிஞ்சுக்கங்க...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சுக்கங்க...

தேசியக் கொடி

நம் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்துவது என சட்டப்படி வரையறுத்துள்ள விதிகள் இவை.
கொடி வணக்கத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
பொதுக் கட்டிடங்களில் சூரியோதயத்தின் போது பறக்கவிட்டு, சூரியன் மறையும்போது இறக்க  வேண்டும். விடுமுறை நாட்களிலும் இந்த முறையே பின்பற்றப்பட வேண்டும்.
பறக்க விடும்போது அதிக வேகமாக செயல்பட வேண்டும். கொடி இறக்கும்போது மிகவும் தொய்வாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
பால்கனி, கட்டிட வராந்தாக்கள் போன்றவற்றிலிருந்து பறக்கவிடும் போது கொடிக் கம்பத்தின் நுனியில் ஆரஞ்சு நிறம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
சுவர்களோடு சேர்த்து கொடிகட்ட வேண்டுமென்றால் ஆரஞ்சு நிறம் கொடிக்கு எதிரில் நிற்கும் நபரின் வலப்புறத்தில் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாலைகளுக்கு மேலே கொடியைப் பறக்க விடும்போது  ஆரஞ்சு நிறம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிலைகள், நினைவுச் சின்னங்கள் திறந்து வைக்கும்போது தேசியக் கொடியை முதலில் பறக்கவிட வேண்டும். சிலைகளை தேசியக் கொடியால் மூடக்கூடாது.
கார்களில் பானட்டின் நடுவில் அமைந்துள்ள கம்பியில் கொடியைப் பறக்கவிட வேண்டும்.


வேற்றுநாட்டுக் கொடிகளைச் சுவர்களில் பதிக்கும்போது நமது கொடி வலப்புறமாகவும், அதன் கம்பம் உயர்ந்தும் இருத்தல் வேண்டும்.
வெளிநாட்டு விருந்தினர்களுடன் நம் அதிகாரிகள் செல்லும்போது அரசு காரின் வலப்புறம் நமது தேசியக் கொடியும், விருந்தினரின்  நாட்டுக் கொடியை  இடப்புறமும் பறக்கவிட வேண்டும்.
தேசியக்கொடி நிலத்தில் தொடாதவாறு இருக்க வேண்டும்.
சவப்பெட்டியில் உபயோகிக்கும்போது பூத உடலின் தலைப்பாகத்தில் ஆரஞ்சு நிறம் வருமாறு அமைய வேண்டும்.
விளம்பரங்களுடன் தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது.
கெட்டுப்போன கொடிகளைக் கிழித்து எறியாமல் தீயிலிட்டு சாம்பல் ஆக்கிவிட வேண்டும்.
சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும்  காந்திஜியின் பிறந்த தினங்களில் கொடிகளை எங்கும் பறக்கவிடலாம்.
பிறநாட்டு தேசியக் கொடிகளுடன் நமது கொடியை பறக்கவிடும்போது அது வலப்புறம் ஓரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேற்றுநாட்டுக் கொடிகளை வரிசை அமைப்பில்
(A to Z) பறக்கவிட வேண்டும்.
ஒரு கம்பத்தில் இரண்டு கொடிகள் மற்றும் அழுக்கான கொடிகளைப் பறக்கவிடக் கூடாது.
கொடியை கீழே இறக்கியபின் சல்யூட் செய்யக்கூடாது.

தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions