c உமாஷக்தி கவிதைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உமாஷக்தி கவிதைகள்

வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு

சில பேர் வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்கிறார்கள்
சில பேர் வாழ்க்கையை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சில பேர் புதுமைப்பித்தன்
உரைத்ததைப்போல
வாழ்வதாகச் சொல்கிறார்கள்...
ஆனால் எல்லோரையும்
கடந்து செல்கிறது
வாழ்க்கையெனும் மகாநதி
உண்மையில் வாழ்க்கை
மிகச் சுலபமாக
நம் கண் முன்னேயே
கரைந்து போகிறது
குழந்தையின் கையில் உள்ள
குச்சி ஐஸைப் போல!

உயிர்

முத்தத்தால்
ஒவ்வொருவரும்
உயிரையும் அன்பையும்
காதலையும்
உறிஞ்ச எத்தனித்து
வெறும் உமிழ்நீரோடு
முடிந்து போகிறார்கள்!!

அவன் முகம்
என்றோ பார்த்தது
ஒரு முகம்
திரு முகம்
என்றேனும் வருமோ
சிறு கனவிலேனும்?

அவன் சொன்னது
அவன் சொன்னான் -
எப்போதாவது நினைத்தால்
நூறு வயசு
எப்போதும் நினைத்தால்
ஆயிரம் வயசு

எப்போதாவது நினைத்தால்
புரையேறும்
எப்போதும் நினைத்தால்
அதன் பெயர்
சுவாசம்

எப்போது நிகழ்ந்தது என்றேன் அவனிடம்
எப்போதும் நிகழ்வது என்றான்!

மரணம்
மரணம் சில சமயம்
மரணமாக வருகிறது
சில சமயம்
காதலாகவும் கனிகிறது!

பிரியம்
எல்லோரிடமும் இருக்கிறது
பல சமயம் அது
மாவோ சொன்னதைப் போல
பன்றியின் முன்
இறைத்த முத்தாகிக் கிடக்கிறது!

முத்தங்கள்
உதிர்ந்த
நட்சத்திரங்கள்
உன் இறந்த
முத்தங்கள்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions