c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

நகைச்சுவை பஜார்...

நகைச்சுவைக் கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும், இளம் கலைஞர்களை உருவாக்கும் எண்ணத்தோடும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ந.சேதுராமனை நிறுவனராகவும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தனை தலைவராகவும் கொண்டு நகைச்சுவை மன்றத்தைத் தொடங்கி ஆண்டு தோரும் ‘வாங்க சிரிக்கலாம்’ என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இவ்வாண்டு இந்தச் சங்கத்தின் 25ஆம் ஆண்டு விழாவாக மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் கொண்டாடப்பட்டது. கலைஞர்கள் ஏராள மானோர் கலந்துகொண்டு நகைச்சுவை விருந்தைப் படைத்தனர்.
நகைச்சுவை மன்றத்தினரின் பேரணி முடிந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமையுரையாற்றிய மருத்துவர் ந.சேதுராமன், மன்றத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். பேராசிரியர் கு.ஞான சம்பந்தனுக்கு ‘நகைச்சுவை பேரரசு’ என்னும் பட்டத்தை வழங்கினார். தமிழ்நாடு கூட்டுற வுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, நடிகர் மயில் சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேராசிரியர்கள் சேவுகப் பெருமாள், சாகுல் ஹமீது, செந்தூரன், அசோகன், மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், புலவர் கணேசன், கவிஞர் மார்சல் முருகன் ஆகியோரின் சிரிப்புரைகள் கலகலக்க வைத்தன.
இதனைத் தொடர்ந்து தனபாக்கியம், முத்துசுப்பிரமணியம் ஆகியோருக்கு ‘மூத்த நாடகக் கலைஞர்கள்’ விருதும், ஆஸிமா ஃபர்ஜிஸ், இனியா, விக்டோரியா, கவிஞர் சரவணபாண்டியன் ஆகியோருக்கு ‘வளரும் கலைஞர்கள்’ விருதும், எழுத்தாளர் காமுத்துரை, கவிஞர் ஆத்மார்த்தி, கரிசல்பட்டி  சுந்தர்ராஜன் ஆகியோருக்கு சிறப்பு விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நகைச்சுவை கலைஞர் அரவிந்த், குழந்தை குரலில் பேசியும் நடனம் ஆடியும் பார்வை யாளர்களை மகிழ்வித்ததுடன் புல்லாங்குழல் இசையும் வழங்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். மதுரையின் அசத்தல் மன்னர்களின் நிகழ்ச்சிகளும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. மதுரை நகைச்சுவை மன்றத்தின் பிரமுகர்களான வெங்கடேஷ் ஆறுமுகம், மேலூர் சசி, வடிவேல் டேவிட், ராமர் (என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா), பாலா, கிறிஸ்டோபர், அர்விந்த், சிவா, மணிகண்டன் மற்றும் பலரின் ஹி...ஹி...க்களால் அரங்கம் வயிறு குலுங்கியது. பேராசிரியர் சங்கர்ராம், மூ.சு.மதியழகன் ஆகியோரின் நையாண்டி நாடகமும், தேசிய நல்லிணக்கப் பாடகர் இலட்சியம் சிதம்பரம் மற்றும் பலகுரல் மன்னர் முருகேசன் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் சுவாரஸ்யமாக மனதைக் கவர்ந்தன.
- எஸ்.சஞ்சய்


புதிதாக கட்டப்பட்ட பாலத்தைத் திறந்து வைக்கும் விழா. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அனை வரும் கூடியிருக்கிறார்கள்.
பாலம் திறக்கப்பட்டது. அப்போது ஒரு அமைச்சர், ‘இந்த நிகழ்வை மேலும் மகிழ்ச்சிகரமாக ஆக்க ஒரு யோசனை சொல்கிறேன். இந்தப் பாலத்தில் நூறாவதாக எந்த வாகனம் வருகிறதோ அந்த வாகனத்தின் டிரைவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசாக அளிக்கலாம்’ என்று சொன்னார்.
“நல்ல யோசனை, மக்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் மகிழ்ச்சி’’ என்று அதிகாரிகள் ஆமோதித்தனர்.
வாகனங்கள் வந்துகொண்டிருந்தன
ஒன்று, இரண்டு, பத்து, இருபது, மு்பது...
கடைசியாக நூறாவது வாகனம் வந்து நன்றது. அது ஒரு அம்பாஸிடர் கார்.
ஒரு காவலர் அந்த வாகனத்தின் அருகே ென்று டிரைவரைப் பார்த்து புன்னகைத்தபடி ‘கீழே இறங்குங்கள்’என்றார்.
அந்தக் காரின் பின்சீட்டில் அவரின் குடும்பத்தார் அமர்ந்திருந்தார்கள்.
“என்ன சார் விஷயம்’’ என்று அந்த டிரைவர் குழப்பமாகக் கேட்டபடி பதட்டத்துடன் இறங்கினார்.
காவலர் விஷயத்தைச் சொல்ல, அமைச்சர் பத்தாயிரம் ரூபாய் பணத்தை அந்த டிரைவரிடம் கொடுத்தார். சந்தோசத்துடன் வாங்கிக் கொண்ட அந்த டிரைவரிடம் அமைச்சர் கேட்டார்:
“இந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?’’
“முதல் வேலையாக லைசென்ஸ் எடுக்கப் போகிறேன்’’ என்றார் டிரைவர்.
அமைச்சருக்கோ அதிர்ச்சி!
நடப்பதையெல்லாம் காருக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த டிரைவரின் மனைவி பயத்துடன் “சரியா கண்ணுகூட தெரியல, நீங்க கார் ஓட்டாதீங்கன்னு படிச்சிப்படிச்சு சொன்னேன், மனுசன் கேட்டாத்தானே இப்ப பாரு போலீஸ் பிடிச்சிட்டாங்க’’ என்று கத்தினாள்.
காவலருக்கும் அதிர்ச்சி!
பின்னாலிருந்த டிரைவரின் மாமனாருக்கோ காது சரியாக கேட்காது. அவர் காரில் இருந்தபடியே “காரைத் திருடாதீங்க மாப்ள, பேசாம பஸ்ஸுல போகலாம்னு சொன்னேன், கேட்டாத்தானே’’ என்று தலையில் அடித்துக்கொண்டார்.
இப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி யடைந்தார்கள்.
- செல்லூர் ராஜூ,
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்,
தனது வாழ்த்துரையில்.


பார்வையாளர்களில் வசதி படைத்த சிலர் பொன்னாடைகளை அணிவித்து விருது பெற்றோருக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சிலர் கதர் துண்டுகளை அணிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் “கதர் துண்டுகள்தான் உண்மையிலேயே சிறந்த உபயோகமுள்ள துண்டுகள். எனக்கு ஆயிரக்கணக்கான பொன்னாடைகளை போர்த்தியுள்ளார்கள். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறேன்’’ என்றார்.
-  விழாவில் கு. ஞானசம்பந்தன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions