c நமது நூலகம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நமது நூலகம்

உயிரில்லாத உலகத்தில் உயிருள்ள எந்திரம்!

பிரம்மா

சொர்ணபாரதி, இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர். ‘கல்வெட்டு பேசுகிறது’ எனும் பெயரில் பல்லாண்டுகள் சொந்த பொருள் இழப்பில் இலக்கியப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிற கவிதைச் சேவகர். சேவகம் செய்வதில் இவர் சேவகர்.
அவரது இன்றைய “எந்திரங்களோடு பயணிப்பவன்’’, கவிதைத் தொகுதி, அவருடைய முந்தைய “மனவெளியளவு’’ என்ற தொகுதிக்குச் சில ஆண்டுகள் பிறகு வெளிவந்திருக்கிறது. இந்தச் சில ஆண்டுகள் கவிஞரின் பயணத்தில் பல புதிய பிரதேசங்களையும், புதிய மொழிப் பிரயோகத்தையும் கொடுத்திருப்பதை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
மனித உறவுகளில் சொர்ணபாரதிக்கு நிறைய தயக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பூக்கள் கூட நம்பத் தகுந்தவையா அல்லவா என்பதை நிறையவே யோசிக்கிறார். உரையாடல் நிகழ்த்துகிறார்.
தன் விழிகளின் நேர்மையை தனக்குள்
முணுமுணுத்தபடியே
மௌனம் காக்கும் அணில்
அடிக்கடி அம்மலரின் முட்களால்
காயப்படும் அது.
வாழ்கிற அல்லது வாழ்வதாக நம்புகிற நமக்கு அடிக்கடி ஏற்படுகிற, அந்நியத்தன்மை, மனிதர்களே கூட அண்டை வெளிக்கிரக மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கிற துர்ப் பாக்கியத்தை அனுபவிக்க நேர்கிறது.
இயந்திரங்கள்...
அவை வரையறுக்கப்பட்ட
செயல் திட்டங்களான
மூளைகளைக் கொண்டவை
அவற்றின் இதயமும் கூட
மூளைக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும்
எந்திரங்கள் சுயமாய் இயங்கினாலும்
ஓர் எஜமானனுக்கு அடிமையானவை
கவிஞர்கள், தனக்குள் இருக்கும் உலகத்தையே எழுதுபவர்கள், சொர்ணபாரதி தான் வாங்கிக்கொண்ட உலகத்தை அழகாகத் திருப்பி அளிக்கிறார், நன்றாகவே!
நூல்:எந்திரங்களோடு பயணிப்பவன்
ஆசிரியர்: சொர்ணபாரதி
வெளியீடு:அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்,
41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை - 11
பக்கங்கள்:112
விலை ரூ:90/-

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions