c லீட் இந்தியா!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

லீட் இந்தியா!

சாதனை இளைஞர்களை உருவாக்கும் வித்தியாசமான இயக்கம்

‘நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளரும் தமிழ்ப் பிள்ளைகளை திறன்மிகு பண்பாளர்களாக்கி, உயர் அரசு பதவிகளில் அமர அடித்தளம் அமைப்பது’, ‘நல்லவர்கள்  கைகளில் அதிகாரம் இருந்தால், சமுதாயத்திற்கு நிறைய நல்லவை நடக்கும்’ ஆகிய தொலைநோக்குடன்  காவியன் அறக்கட்டளை, ‘‘லீட் இந்தியா’’ (LEAD INDIA) என்ற இயக்கத்தை 2012 முதல் நடத்தி வருகிறது.
திரு.சி.தீனதயாளபாண்டியனை நிர்வாக அறங் காவலராகவும் திருமதி.அனிதா தீனதயாள பாண்டியனை அறங்காவலராகவும் கொண்டு செயல்பட்டு வரும் காவியன் அறக்கட்டளையின் லீட் இந்தியா (LEAD INDIA) என்ற இந்த இயக்கத்திற்கு காவியன் கட்டுமான நிறுவனம் தொடர்ந்து பொருள் உதவி வழங்கி வருகிறது.
இந்த இயக்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கான ‘ஆளுமைத் திறன் வளர்ப்பு’ முகாம்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள காவியன் பள்ளியில் 26.12.2015 முதல் 31.12.2015 வரை தன் ஏழாவது முகாமை நடத்தியது.
பள்ளி முதல்வர் திரு. பத்மாஷினி மாணவர்களை வரவேற்றுப் பேசினார். முகாமின் முதல் நாள் அனைத்து மாணவர்களும் பொது அறிவுத் தேர்வை எழுதினார்கள். முறையாக நாளிதழ்களைப் படித்து நாட்டு நடப்பினை நன்கு அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் தினமும் உணர்த்தப்பட்டது.
27.12.2015 அன்று பணி நிறைவு பெற்ற திரு. கற்பூரசுந்தரபாண்டியன்  ஐ.ஏ.எஸ். சிறப்புரை ஆற்றினார். அடுத்த மூன்று நாட்களில் திரு.ரவீந்திரநாத், திருமதி.கௌரி ரவீந்திரநாத், மதுரை விவசாயக் கல்லூரி உதவிப் பேரசிரியர் திரு. அருண்வீரணன், என்டகன் நிறுவனத் தலைவர் திரு.கைலாசபதி, உடற்பயிற்சி ஆசிரியர்கள் திரு.கார்த்திக், திரு.ராம், திருமதி.கவிதா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.   
முகாமில் ஆங்கிலத்தில்  பேசவும் எழுதவும் தீவிரமான பயிற்சி,  யோகா பயிற்சி, சதுரங்கப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி,  குழுவுடன் இணைந்து செயல்படும் பயிற்சி ஆகிய பயிற்சிகளுடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பண்பட்ட பெரியோர்களுடன் கலந்தாய்வு, முடிவெடுக்கும்  திறன் வளர்ப்பு, தன்னலமற்ற  பிறர்நலம் பேணும் பேராண்மை வளர்ப்பு போன்றவையும் பயிற்றுவிக்கப்பட்டன. லைஃப் இஸ் பியூட்டிபுல் (Life is Beautiful) திரைப்படம் திரையிடப்பட்டது. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.இளங்கோ இந்த ஆண்டு மாணாக்கர்களுக்கு சுயதிறன் உணரும் (mental ability test) பயிற்சி அளித்தார்.
2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப் பட்டு தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வு தொடர்பான வாசிப்பு நடத்தப்பட்டது. மேலும் 2014ல் நடந்தேறிய சிவில் சர்வீஸ் (Civil Services) பிரிலிமினரி (Preliminary) தேர்வுகளின் இரண்டாவது தாளைத் தேர்வாக எழுதினார்கள்.
இந்த ஆளுமைத்திறன்  வளர்ப்பு  முகாமிற்கு  மாணவர்களிடமிருந்தோ, பிற அமைப்புகளிடமிருந்தோ எந்தவிதக் கட்டணமோ, நன்கொடையோ காவியன் அறக்கட்டளை வசூலிப்பதோ, பெற்றுக்கொள்வதோ இல்லை.

- சீனி.கோபாலகிருட்டிணன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions