c ஆசிரியர் பக்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்களுக்கான உறவு பாலம்

அன்புடையீர், வணக்கம்.

உலகத் தரச் சான்றினையும் பயனாளிகளின் நன்மதிப்பையும் பெற்று, மதுரையை முதன்மைச் செயற்களமாகக் கொண்டு இயங்கிவரும் KAVIYAN CONSTRUCTION PVT. LTD. (KCPL) எனும் பெயரிலான எமது கட்டுமான நிறுவனத்தில் இருந்து மலரும் மாத இதழ் இது. கட்டுமான நிறுவனம் ஒன்றின் இதழ் என்றாலும் இதில் கலையும், இலக்கியங்களும், சமூக விழிப்புணர்வுச் செய்திகளும் கைகோத்துக் கொண்டு மணக்கும். எமது நிறுவனத்தின் வாயிலாக வெளிப்படும் எனது அன்பின் குரலாகவும், சமூக அக்கறையின் குரலாகவும் இவ்விதழ் ஒலிக்கும். மேலும் அறத்தின் கோணத்திலிருந்து யாவற்றையும் உரைக்கும் அனைத்துத் தரப்பு அறிவாளுமைகளும், கூடிக் களித்துப் பக்கங்கள் தோறும் குரலெழுப்பும் பறவைகளின் சரணாலயமாகவும் இவ்விதழைப் படைக்கிறோம்.

இவ்விதழில் எழுதவிரும்பும் யாவரும் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது படைப்புகளை அனுப்பலாம். பல்சுவை காவியம் அலுவலக முகவரிக்கு அஞ்சலிலும் அனுப்பலாம். பாகுபாடு பார்க்காமல் படைப்பின் தரமுணர்ந்து பரிசீலித்துப் பிரசுரிக்க இவ்விதழ் தயாராக இருக்கிறது. அதேபோல www.kaviyam.in எனும் இணைய முகவரியில் இவ்விதழைப் படித்து மகிழ்வதோடு பதிவிறக்கமும் செய்து பயன் பெறலாம் என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

காட்சி ஊடகம், இணைய ஊடகம், ஒலி ஊடகம் என்று பல்வேறு வகையான ஊடகங்கள் எவ்வளவுதான் நமது சமூகத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும் அச்சு ஊடகம் தான் நமது தாய் ஊடகம் எனும் உணர்வோடு நாம் இவ்விதழின் மடியில் தலை சாய்க்கலாம்.

கற்பாறைகளிலும், பனையோலைகளிலும் தங்களது அறிவின் ஆளுமைகளைப் பதித்து உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் மேதமைமிக்க நமது முன்னோர்களின் மரபில் வந்தவர்கள் நாம்.

இவ்விதழும் பொறுப்புணர்வோடு மேற்கொள்ளப்படும் நமது மரபின் தொடர்ச்சியே. உங்கள் அனைவரது பங்கேற்பும் இவ்விதழுக்கு மாதந்தோறும் மாண்பு கூட்டட்டும். அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

அன்பு வணக்கங்களுடன்,

என்றும் உங்கள்


வெளியீட்டாளர், ஆசிரியர்

 

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions