c தெரிஞ்சிக்கங்க!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சிக்கங்க!

கார் அரிசி
இந்த அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உறுதியடையும். தசைகள் நல்ல வளர்ச்சி பெறும். தோற்றத்தில் கவர்ச்சி மிளிரும். சருமம் மென்மையாகவும் பட்டு போலவும் இருக்கும்.
குண்டு சம்பா
இந்த அரிசி நாக்கு வறட்சியைத் தீர்க்கும். ஆனாலும் கரப்பான் பிணியை உண்டாக்குவதுடன் பசியை மந்திக்கச் செய்யும். ஆக அளவுடன் பயன்படுத்தவும்.
குன்றுமணிச் சம்பா
இது வாதக் குறைபாடுகளை நீக்கும். உடல் வலிமையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா
இது சிறுவாத நோய்களைக் குணமாக்கும். பசியை அதிகரிக்கும்.
கோடைச் சம்பா
இது வாதம் மற்றும் பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
ஈர்க்கு சம்பா
இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்குச் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடுமாகையால் அளவுடன் பயன்படுத்தவும்.
புழுங்கல் அரிசி
இது எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது.
தினை அரிசி
இது சளித் தொற்றைப் போக்கும். காய்ச்சலின் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும்.  அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
-சௌந்தர்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions