c ரீமிக்ஸ் பழமொழிகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ரீமிக்ஸ் பழமொழிகள்

பழசு : பல் போனால் சொல் போச்சு!
புதுசு : செல்  போனால் சொல் போச்சு!

பழசு : காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!
புதுசு : பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்!

பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்!
புதுசு : கொரியன் செட்டு கதறடிக்கும்!

பழசு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
புதுசு : செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்!

பழசு: வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு!
புதுசு: செல்போன் ஒண்ணு, சிம்மு ரெண்டு!

பழசு: கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!
புதுசு: பேசாம இருந்தால் பேலன்ஸ் குறையாது!

பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்!

பழசு: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!
புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்!

பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்!
புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தால், ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்!

பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது!
புதுசு: டவர் கிடைக்கும்வரை டைம் காத்திருக்காது!

பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே!
புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions