c தத்துவதாசன் தத்துபித்துகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தத்துவதாசன் தத்துபித்துகள்

மின்னலைப் பாத்தா
கண் போய்டும்.
பாக்கலைன்னா
ரொம்ப சிம்பிள் -
மின்னல் போய்டும்.

நீங்க எவ்வளவு பெரிய  
பருப்பா இருந்தாலும்  
அதை வைத்து  
சாம்பார்
செய்ய முடியாது.

டீ மாஸ்டர்
எவ்வளவுதான்
லைட்டா
டீ போட்டாலும்
அதுலயிருந்து
கொஞ்சம் கூட
வெளிச்சமே வராது.

பஸ் ரூட்ல
பஸ் போகும்
டிரெயின் ரூட்ல
டிரெயின் போகும்
பீட்ரூட்ல
பீட்ரூட் போகாது.

சந்திரன்ல
கால் வச்சாலும்
செவ்வாய்ல
கால் வச்சாலும்
பூமிக்கு வந்தாதான்
சோத்துல
கை வைக்கமுடியும்.

முட்டையிடாத
பறவை
ஆண் பறவை.

கோழிக்கு 1, 2, 3
தெரியாது
அதனாலதான்
முட்டை முட்டையாகப்
போடுகிறது.

ஊசி குத்தியதும்
ரத்தம் வருவது,
குத்தியது
யாருன்னு
பாக்கத்தான்.

வெங்காய வியாபாரிங்க
யூனியன் வச்சா
என்ன பெயர்
வைப்பாங்க,
ஆனியன் யூனியன்.

காதலுக்காக
தாஜ்மகால்
கட்டியது
அன்று!
காதலியைக்
கட்டினாலே
அதிசயம்தான்
இன்று!!

-சௌந்தர்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions