2015 ஏப்ரல் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 2015, மாத இதழ்

காவியன் பள்ளியில் 6வது ஆண்டு விழா கொண்டா…

காவியன் பள்ளியில் 6வது ஆண்டு விழா கொண்டாட்டம்

அமைதியும் இனிமையுமான கல்விச் சூழலுக்கு ஏற்ப, திண்டுக்கல் மாவட்டம்  கொடை ரோடு, அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள 'காவியன் பள்ளி’யின் 6வது ஆண்டுவிழா 07.03.2015 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது. விழாவை, காவியன் கட்டுமான  நிறுவனத்தின் இயக்குநர் திருமதி.அனிதா தீனதயாளபாண்டியன்  அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.... Read more

அனைத்து மக்களுக்கும்... நீதி செய்யும் நி…

அனைத்து மக்களுக்கும்... நீதி செய்யும் நிதி அறிக்கை!

நிதியமைச்சர் அருண்ஜேட்லி 2015 - 2016 ஆம் ஆண்டுக்கான முழுமையான முதல் வரவு செலவு அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டார். ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்கள்  தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்தபடி  'இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானது’ என்பார்கள்... Read more

மர நினைவுகள்

மர நினைவுகள்

கடந்த வாரம் திடுதிப்பென்று மழைப் பெய்தது. நான் வேலைக்குப் போகும் வழியில் நான்கைந்து இடங்களில் இருக்கும் தூங்குமூஞ்சி மரங்கள் பூக்கத் தொடங்கிவிட்டன. அவற்றுக்குக் கால மயக்கம் ஏற்பட்டுவிட்டது. வழக்கமாக கோடையின் இறுதியில் பூப்பவை அம்மரங்கள். மயிலிறகு போலிருக்கும் அம்மரத்தின் பூக்கள் மயக்கும்... Read more

கவிதைகள்

கவிதைகள்

நான்தேதித்தாள்காலையிலும்மாத்திரை அட்டைஇரவிலும்கிழிகையில் தெரியும்நாட்கள் கிழிவதுஇடையில்நானொன்றும்கிழிக்கவில்லை.அரிசிஎனக்கான அரிசியில்என்பெயரெழுது இறைவாபசிக்கிறது.நறுக்குஉதிரும் போதும்அழகுபூக்கள் மட்டுமே.தூறல்அவசரமாய் குளித்துஉண்டு உடுத்திஅலுவலகம் கிளம்பினேன்நிற்பதற்குள்கொஞ்சம் நனைய வேண்டும்மழையில்.தந்தைமுதுகில் உருண்டுநதியில் விழுந்தது கலயம்சாம்பலாய் கரைந்தார்கையில் தாங்கிநீந்தச் சொன்ன தந்தை.சங்கீதம்புல்லினத்தின் புறப்பாட்டோடுவாசல் தெளித்துப் பெருக்கிகோலமிடுதலும்காலை கருக்கலின் சங்கீதம்.கோலங்கள் வாசல்கள் தேடினவாசல்களின்றி நகரில்அடுக்குமாடி குடியிருப்புவாசல்களோடு காணாமல்... Read more

மொழியிலிருந்து இசையைப் பிரிக்க முடியாது!…

மொழியிலிருந்து இசையைப் பிரிக்க முடியாது! (சாதனை மனிதர்கள்)

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகளார்,   வி.ப.கா. சுந்தரம் என்ற தமிழிசை ஆய்வாளர்கள் வரிசையில் வந்துள்ள நிகழ்கால ஆளுமை நா.மம்மது. 'தமிழிசை வேர்கள்', 'தமிழிசைத் தளிர்கள்', 'இழை இழையாய் இசைத் தமிழாய்', 'ஆதி இசையின் அதிர்வுகள்', 'தமிழிசை வரலாறு' ஆகிய  இவரது நூல்கள்,... Read more

மிஸ்டர் தமிழ்நாடு

மிஸ்டர்  தமிழ்நாடு

ஆண்டுதோறும் 'மிஸ்டர் தமிழ்நாடு' என்கிற ஆணழகன் போட்டியை நடத்தி வருகிறது 'நியு குலோப் ஃபிட்னஸ் சென்டர் (ழிநிதிசி)’.பெப்கோ.அ.குமாரவேலுவை சேர்மேனாகவும், வெற்றிதுரைசாமியை தலைவ ராகவும், ஆர்.எல்.திருவேங்கடத்தை பொதுச் செயலாளராகவும் எஸ்.குமாரநந்தனை பொருளாளராகவும் கொண்டு இயங்கிவரும் இந்த 'நியு குலோப் ஃபிட்னஸ் சென்டர்’ அமைப்பின்... Read more

காலம் கனியும் ... காந்தியம் மலரும்...

காலம் கனியும் ... காந்தியம் மலரும்...

தமிழருவி மணியன்...பேச்சாளர், எழுத்தாளர், காந்தியவாதி, சமூக விமர்சகர், அரசியல்வாதி எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். காமராசரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் பிரவேசித்தவர். அருவி போன்று சரளமான சொற்பொழிவால் 'தமிழருவி' என காமராசரால் அழைக்கப்பட்டவர். காந்திய மக்கள் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.... Read more

நாடகக்காரி

நாடகக்காரி

அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில்லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ் என்பவனுக்குத்தான் அவள் வைப்பாக இருந்துவந்தாள். அன்று அவளும் கோல்ப்பக்கோவும் முன்னறையில் உட்கார்ந்து... Read more

2015 & 2016 பட்ஜெட் சேவை வரி விதிப்பில் …

2015 & 2016 பட்ஜெட் சேவை வரி விதிப்பில் மாற்றங்கள்!

இதுநாள் வரை 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரி, 16 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அமல்படுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சேவை வரியிலிருந்த கல்வி வரி, உயர் கல்வி வரி முதலியன நீக்கப்படுகிறது. ஆனால் ஸ்வச்பாரத் வரி என்ற புதிய வரி 2... Read more

வந்தே மாதரம் தந்த பங்கிம் சந்திரர்

வந்தே மாதரம் தந்த பங்கிம் சந்திரர்

தாய்க்கு வணக்கம் என்று தாய் மண்ணை வணங்கும் பொருள் கொண்ட 'வந்தே மாதரம்' எனத் தொடங்கும் தொடக்ககாலத் தேசிய கீதத்தைத் தந்தவர் வங்க எழுத்தாளர் கவிஞர் பங்கிம் சந்திரர். இந்திய விடுதலைப் போராளிகள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ்க் கொண்டு வந்து... Read more

கட்டில் கதைகள்

கட்டில் கதைகள்

ஒருநாளைக்கு ஒரு தடவையாவது கட்டிலைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த காலம் என்று ஒன்று இருந்தது ரெங்கம்மா குடும்பத்துக்கு. அதற்கான காரணங்கள் ஏகப்பட்டதிருப்பினும் முக்கியமான காரணம் அவளது பங்காளிகள் தான். அவர்களுடன் பகை ஏற்பட்டது தனிக்கதை, பெரிய பாரதம், அது வேண்டாம் இப்போது.... Read more

அஞ்சலி தியாகி மாயாண்டிபாரதி

அஞ்சலி தியாகி மாயாண்டிபாரதி

மதுரை, மேலமாசி வீதியிலுள்ள 70 ஆம் எண் வீட்டில் இருளப்பன், தில்லையம்மாள் தம்பதிக்கு 11வது குழந்தையாகப் பிறந்தவர் தோழர் மாயாண்டி பாரதி. எழுத்தாளர், இலக்கியவாதி, தியாகிகள் சங்கத் தலைவர், மூத்த கம்யூனிஸ்ட், ஊழல் எதிர்ப்புப் போராளி என்று பல முகங்கள் அவருக்கு.... Read more

காவிய மடல்கள்

காவிய மடல்கள்

சென்னையின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு (சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்) முக்கிய பங்குண்டு. அதைக் கொண்டு வந்தது தீரர் சத்தியமூர்த்திதான் என்றறிந்தபோது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அப்படியான தியாகிகளெல்லாம் இன்றைக்கு எங்கே சார் இருக்கிறார்கள்?-நை. நீல்ராஜ், திருச்சி- மரங்கள்... மகத்துவங்கள்... கட்டுரை... Read more

வாழ்வை வாசிக்கும் கதைகள் (நமது நூலகம்)

வாழ்வை வாசிக்கும் கதைகள் (நமது நூலகம்)

'சக்கை’ தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்ட கலைச்செல்வி, வெகுஜன இதழ்களானாலும், இலக்கிய இதழ்களானாலும் தரமான கதைகளை பாகுபாடின்றி எழுதி வருபவர். பெரும்பாலும் பெண்களின் உலகமே இவரது கதைப் பரப்பாக இருக்கிறது. பெண்ணாக இருந்து எழுதுவதால் பெண்களின் பிரச்சினைகளை துயர் நிரம்ப எழுதிச்... Read more

வாதம் எதனால் வருகிறது?

வாதம் எதனால் வருகிறது?

வாதம் வர அடிப்படை காரணம் பாரிச வாயு அல்லது பக்ச வாயுவே. இதை ஆதாரமாகக் கொண்ட வாதங்கள் கைகள், கால்கள், விரல்கள், பேச்சாற்றல் மற்றும் பார்வைகளை செயல் இழக்கச் செய்யும் என்கிறார் அகத்தியர்.“கரமோடு பாதமு செம்மானமு மொழியு நேத்திரமுஞ் சனியாக்க மெடுவாவி... Read more

நஞ்சே நலமா

நஞ்சே நலமா

அன்று ஞாயிற்றுக்கிழமை. விளையாட மைதானம் சென்ற சதீஸ், கோவில் அருகே படுத்திருந்த மணிபாரதியை பார்த்துவிட்டான். அருகில் சென்று சின்ன பயத்துடன், “அப்பா'' என தோள் தொட்டான். 'எவன்டி என்ன எழுப்பறது?’ என கண்களை உருட்டியபடி மூர்க்கமாக எழுந்தவன் மகனைப் பார்த்தவுடன் பாசமாக... Read more

பண்பாட்டை வளர்க்க வேண்டிய தருணம்!

பண்பாட்டை வளர்க்க  வேண்டிய தருணம்!

தான் உண்டால் தனக்கு இறவா நிலையான வாழ்க்கை கிடைக்கும் என்று தெரிந்திருந்தும், தமிழ் வாழவேண்டும் என்பதற்காக சாகா வரமான நெல்லிக்கனியை தமிழச்சி ஔவை பிராட்டிக்குக் கொடுத்த பண்பாட்டின் சிகரமான அதியமான் வாழ்ந்த பூமி இந்த பூமி. தான், தனக்கு, தன்னுடையது என்ற... Read more

Prev Next


நிகழ்வுகள்

எண் : 1/62-14, ரவி காலனி முதல் தெரு,
பவுல் வெல்ஸ் சாலை,
புனித தோமையார் மலை,
சென்னை-600 016,

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :
© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions